• முகப்பு
  • district
  • எல் ஐ சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்.

எல் ஐ சி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் எல்ஐசி முகவர்களின் கோட்ட 4வது மாநாடு கோட்ட தலைவர் தங்கமணி தலைமையில் பாலாஜி மஹாலில் நடைபெற்றது . இதில் மாநில செயல் தலைவர் பூவலிங்கம், மாநில பொதுச்செயலாளர் எஸ் ஏ கலாம், மாநில பொருளாளர் கே தாமோதரன், உள்ளிட்ட கோட்டத்திற்குட்பட்ட 27 கிளைகளை சேர்ந்து 300க்கும் மேற்பட்ட முகவர் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில், எல்ஐசி நிறுவனம் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே நீடிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாலிசிகள் மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும், முகவர்களுக்காண குழு காப்பீட்டினை ரூபாய் 25 லட்சமாக உயர்த்திட வேண்டும். பணிக்கொடையினை 5 லட்சமாக உயர்த்திட வேண்டும், முகவர்கள் அனைவருக்கும் மருத்துவக்காப்பீடு அட்டை வழங்கிட வேண்டும், பாலிசி பத்திரத்தை தமிழகத்தில் உள்ள 8 கோட்டங்களிலும் தமிழிலேயே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பேட்டி : எஸ் ஏ கலாம், மாநில பொதுச்செயலாளர், எல்ஐசி முகவர்கள் சங்கம். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended