• முகப்பு
  • pondichery
  • காரைக்காலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்.

காரைக்காலில் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் மக்கள் பாதிக்கப்பட்டதற்கு அதிகாரிகளின் மெத்தன போக்கே காரணம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இது தொடர்பாக புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தி அவர்களை சந்தித்த கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன். அரசு அலட்ச்சியத்தால் காரைக்கால் மாவட்ட மக்கள் பயம் கலந்த பீதியில் உள்ளனர், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட விவாகரத்தில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தாதது கண்டனத்திற்குரியது என்றார். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு உள்ளிருப்பு நோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளதாக தெரிவித்த அன்பழகன் காரைக்காலில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் இந்த அரசின் மீது வைத்துள்ள நம்பிக்கை குறைத்துள்ளது என்று கூறினார். காரைக்கால் மாவட்டத்தை பிரிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளவர்களுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் நிர்வாகத்தின் செயல் அமைந்துள்ளதாக குற்றம் சாட்டிய அன்பழகன் காரைக்காலில் உன் கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படவில்லை, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றும் காரைக்கால், மாகே, ஏனம் ஆகிய பிராந்தியங்களையும் புதுச்சேரி அரசு சாமரீதியாக பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். காரைக்கால் மாவட்ட மக்கள் உயிர் சம்பந்தமான பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் அங்குள்ள அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய அவர் காரைக்காலில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு இருப்பது இந்த அரசுக்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டது என்றார். காரைக்காலில் ஏற்பட்டுள்ள இந்த நிலைக்கு மாவட்ட நிர்வாகமே முழுவதுமாக காரணம் என்று குற்றம் சாட்டிய அன்பழகன் காரைக்காலில் பலமுறை இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதாகவும் பொதுப்பணித்துறை அமைச்சர் காரைக்காலுக்கு சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து உயர்மட்ட குழுவை கூட்டி போர்க்கால அடிப்படையில் காரைக்கால் மாவட்ட மக்கள் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் . இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ரங்கசாமி நேரடியாக தலையிட்டு காரைக்கால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வகையில் செயல்பட வேண்டும் என அன்பழகன் கேட்டுக் கொண்டார். பேட்டி; அன்பழகன், அதிமுக மாநில செயலாளர் புதுச்சேரி பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

VIDEOS

RELATED NEWS

Recommended