• முகப்பு
  • crime
  • சிந்தாதிரிப்பேட்டை பா.ஜ.க பிரமுகரை கொலை செய்த சம்பவ காரணம்

சிந்தாதிரிப்பேட்டை பா.ஜ.க பிரமுகரை கொலை செய்த சம்பவ காரணம்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

நேற்று இரவு தனதுபாதுகாப்பிற்காக காவல்த்துறை வழங்கிய பி. எஸ். ஓ பாலகிருஷ்ணனுடன் சிந்தாதிரிப் பேட்டை சாமி நாயக்கர் தெருவுக்குச்சென்ற பாலசந்திரன் அங்கு நண்பர்கள் சிலருடன் பேசி கொண்டிருந்தார். அங்கு பாலசந்தர் பேசிக் கொண்டிருந்தபோது பி. எஸ். ஓ பாலகிருஷ்ணன் அருகிலிருந்த டீக்கடைக்கு டீகுடிக்க சென்று உள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல்ஒன்று பாலசந்தரை சரமாரியாக வெட்டிகொலை செய்து விட்டு தப்பியோடினர். இதனை பார்த்து ஓடிவந்த பி. எஸ். ஓ உடனே காவல்துறையினருக்கு தகவல்தெரிவித்து உள்ளார். இதை அடுத்து அங்குவந்த சிந்தாதிரிப் பேட்டை போலீசார் பாலசந்தர் சடலத்தை கைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை பாதுகாப்பு மற்றும் மக்கள் நட மாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து பா.ஜ.க பிரமுகரை கொலைசெய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் குறித்து காவல்த்துறையினர் நடத்திய விசாரணையில், துணி கடை நடத்தி வரும் பாலச் சந்தரின் உறவினரின் கடையில் அதேபகுதியை சேர்ந்த பிரதீப் என்பவர் அடிக்கடி மாமூல்கேட்டு தொந்தரவு செய்ததாகக்கூறப் படுகிறது. அதேபோல, பாலச் சந்தரின் உறவினர்கடையில் அடிக்கடி துணி எடுத்து விட்டு ரவுடி பிரதீப்பின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் பணம் கொடுக் கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக பாலச் சந்தர், பிரதீப்பிடம் கேட்டு வந்து உள்ளார். இதனால் அவர்மீது பாலச்சந்தர் காவல்த்துறையில் தகவல் கொடுத்து உள்ளார். பாலச்சந்தர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பா.ஜ.க பட்டியலினப்பிரிவு தலைவர் பாலச்சந்தர் மற்றும் பிரதீப் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த மோதலின் விளைவாக தான் பாலச்சந்தர் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று முதற் கட்ட விசாரணையில் தெரிய வ ந்திருக்கிறது. கொலை செய்யப் பட்ட பா.ஜ.க பிரமுக பாலச்சந்தரின் சகோதரி அளித்த புகாரின்பேரில் ரவுடிகளான பிரதீப், சகோதரர் சஞ்சய், மற்றொருரவுடி கலை வாணன் மீது வழக்குப் பதிவு செய்து தலை மறைவான மூன்று பேரையும் காவல்த்துறையினர் தேடி வருகின்றனர். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended