Author: THE GREAT INDIA NEWS

Category:

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் இன்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் அதிகாரம் அளித்தல் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணண் செய்தியாளர்களிடம் கூறியதாவது. மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாட பிரிவுகளுக்கும் நேரடி வகுப்புகள் கடந்த 7ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன.அதன் காரணமாக அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகத்திற்கு வரத் தொடங்கிவிட்டனர்.எனவே தேர்வுகளும் நேரடி தேர்வாக நடைபெற உள்ளது.முதலாம் ஆண்டு முதல் செமஸ்டர் மாணவர்களுக்கு மட்டும் தற்போது நேரடி தேர்வாக நடத்தலாமா அல்லது ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தலாமா என்பது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாணவிகளுக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு என்பது அதிகரித்து வருகிறது இது தொடர்பாக உங்களுடைய பார்வை என்ன என்கிற கேள்விக்கு பதியளித்த அவர் தற்போது சமூகத்தில் பெண்களுக்கான பாலியல் தொந்தரவுகள் அதிகரித்து வருவது அன்றாடச் செய்திகள் வாயிலாக தெரிய வருகிறது. அதே நேரத்தில், மத்திய பல்கலைக்கழகத்தில் இது போன்ற எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் எழுவதில்லை,அதற்கு காரணம் மத்திய பல்கலைக்கழகத்தில் தற்போது பயின்று வரும் மாணவ மாணவிகள் கட்டுப்பாடான பெற்றோர்களால்  வளர்க்கப்பட்ட  நல்ல   சூழலில் வந்தவர்களாக  இருக்கிறார்கள். இது போன்ற பிரச்சனைகள் சமூகத்தில் அதிகரிப்பதற்கு காரணம் பெற்றோர்கள் அவர்களை ஒழுங்காக வளர்க்கவில்லை.குழந்தைகளுக்கு சுதந்திரம் என்கின்ற பெயரில் அவர்களுக்கு விதிக்கப்பட வேண்டிய கட்டுப்பாடுகளையும் விதிப்பதற்கு பெற்றோர்கள் மறந்து விடுவதே இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக அமைந்து விடுகிறது உதாரணத்திற்கு என்னை என் பெற்றோர்கள் வளர்த்தது போல் தற்பொழுது குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கவில்லை இதுவே தற்போது நடக்கக்கூடிய அத்தனை தீய செயலுக்கும் முக்கியமான காரணம் என தெரிவித்தார். எனவே பெற்றோர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் கூறினார்.

Tags:

Comments & Conversations - 0