Author: THE GREAT INDIA NEWS

Category: crime

சிவகங்கை மாவட்டம் இளையான் குடி அருகே வீட்டின் உரிமையாளர்கள் வெளி ஊருக்கு சென்றதை அறிந்து, வீட்டின் பூட்டை உடைத்து மூன்று பவுன் நகை மற்றும் ரூபாய் 40,000 ஐ கொள்ளையடித்த மர்மகும்பல். தங்க நகை குறைவாக இருந்த ஆத்திரத்தில் பீரோ மற்றும் அலமாரிகளை தீயிட்டு கொளுத்தி சென்றதால் அதிர்ச்சி. சிவகங்கை மாவட்டம், இளையான் குடி அருகே உள்ள சாலைக்கிராமம் பகுதியில் வலசைக்காடு கிராமத்தில் வசித்து வருபவர் அழகர்சாமி (53). இவர் மலேசியாவில் பணி செய்து வருகின்றார். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 48) மட்டும் தனியாக வீட்டில் இருந்தார். இவர் 3 நாட்கள் முன்பு தனது மகன் விக்னேஸ்வரன் வீட்டிற்கு தேவகோட்டைக்கு சென்று விட்டார். பின்னர் இவர் நேற்று காலை 9 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வீட்டினுள் ரூமில் உள்ள பீரோவில் இருந்த 3-பவுன் தங்க நகை மற்றும் பணம் ரூபாய் 40- ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர்.  தங்கநகை குறைவாக இருந்ததால் ஆத்திரத்தில் பீரோவில் இருந்த துணிகள்,  மற்றும் ஜன்னல்களில் உள்ள ஸ்கிரீன் துணிகளையும் தீயிட்டு கொளுத்தி விட்டு சென்று உள்ளனர். சம்பவம் குறித்து சாலை கிராமம் காவல் நிலையத்தில் பொன்னம்மாள் புகார் கொடுத்துள்ளார். அந்த திருட்டு சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடன்களை வலைவீசி தேடி வருகிறார்.  கடந்த  3 ஆம் தேதி டிராவல்ஸ் நடத்தி வரும் சண்முகராஜா என்பவரது வீட்டில் 23 சவரன் மற்றும் 10 ஆயிரம் ரூபாயும் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். ஒரே வாரத்தில் இரண்டு திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் சாலை கிராமம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.  சட்டங்கள் கொள்ளையன்களுக்கும் திருடன்களுக்கும் எதிராக கடுமையாக்கப்பட வேண்டும். இப்பொழுது இருக்கும் சட்டத்தில் அதிகபட்சம் 100 நாட்கள் இருந்துவிட்டு மீண்டும் வெளியே வந்து தொடர் திருட்டில் ஈடுபடுகின்றனர். திருடன்களின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது, ஒன்றுக்கு இரண்டு முறை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டால் மூன்றாவதாக மீண்டும் திருட்டில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் நடைமுறைக்கு வந்தால் மட்டுமே அப்பாவின் மக்களின் சொத்துக்கள் பாதுகாப்பாக இருக்கும். சட்டத்தை இப்போதே கடுமையாக அமல்படுத்தாவிட்டால் மேலும் பல அப்பாவிகளின் சொத்துக்கள் சூறையாடப்படும். அதுவரைக்கும் மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியே , காலத்திற்கு ஏற்றார்போல் சட்டத்தை சீர்திருத்த வேண்டும். செய்தியாளர் பா. கணேசன்.

Tags:

#இன்றையசெய்திகள்சிவகங்கை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #sivagangai #Thief #burglar #robber #roguery #thief #thieves #robbery
Comments & Conversations - 0