Author: THE GREAT INDIA NEWS

Category: chennai

சென்னை அமைந்தகரை காவல் எல்லைக்குட்பட்ட மேத்தா நகர் , நெல்சன் மாணிக்கம் ரோடு இப்பகுதியில் திருடன்களின் அட்டூழியம் அதிகமாகிக்கொண்டே இருக்கின்றது . இன்று அதிகாலை 4.00 am முதல் 4.30 am மணி வரை, அனுமன் கோவில் பிரதான வாயில் திருடன்களால் உடைக்கப்பட்டுள்ளது. ஆபீசர்ஸ் காலனி 4வது தெருவில் 4.40 am ரமேஷ் என்பவரின் வீட்டில் உள்ள காவலாளியை அடித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பிடுங்கி சென்றுள்ளனர். மற்றும் அதற்கு அடுத்த பக்கத்து பில்டிங்கில் தி கிரேட் இந்தியா நியூஸ் அலுவலகம் உள்ளது , அதனை உடைக்க முயன்று உள்ளனர் உடைக்க முடியாததால் மற்றொரு அலுவலகத்தை உடைத்து இருக்கின்றனர் , அதுவும் உடைக்க முடியாததால் மற்றும் அதே காம்பவுண்டில் இருக்கும் மற்றொரு அலுவலகத்தையும் உடைத்துள்ளனர் உடைத்த உடன் அலுவலகத்தில் இரவு தங்கிய அந்த அலுவலகத்தின் நிறுவனர் போலீசுக்கு போன் செய்து விடுவதாக கூச்சலிட்டு உள்ளார் அதனால் அங்கிருந்து திருடன்கல் தப்பி ஓடிவிட்டனர். மேலும் மோகன் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்த பிறகு , புதிய கட்டுமான தளம் 1வது தெருவில் உள்ள 5 மாடி காவலாளியை தாக்கியதாக தெரிகிறது. மற்றும் ஆவின் பால் விநியோகம் செய்யும் வாலிபரை தாக்கி மொபைலை பறித்து சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் நடந்து செல்பவர்களையும் இரும்புக் கம்பியால் தாக்கியுள்ளனர். இரண்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று ஆக்டிவாவில் வந்ததாக பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்தனர். கதவு இந்த அளவுக்கு உடைத்து அச்சுறுத்தல் கொடுக்கும் நபருக்கு எதிராக காவல்துறை வழக்குப் பதிய வில்லை ஏதாவது திருடு போய் இருந்தால் மட்டும் சொல்லுங்கள் இல்லையென்றால் விட்டு விடுங்கள் என்று கூறி சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஒரு வருடத்திற்கு முன் இதே தேதியில் ஆபீசர்ஸ் காலனி 4வது தெருவில் தி கிரேட் இந்தியா நியூஸ் அலுவலகத்தில் 4 லேப்டாப் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கம் காணாமல் போனது . இன்று வரைக்கும் திருடர்களிடம் இருந்து மீட்ட லேப்டாப் மற்றும் ரொக்கம் இன்னும் உரிமையாளரிடம் காவல்துறை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டே இருக்கின்றது. அமைந்தகரை ஆய்வாளரிடம் கேட்டதற்கு அலட்சியமாக பதில் வருகிறது. திருடன்களிடம் இருந்து மீட்ட பிறகும் இன்னும் உரிமையாளரிடம் லேப்டாப்களை ஒப்படைக்காமல் ஏன் உள்ளார் என்று புரியாத புதிராகவே உள்ளது. அமைந்தகரை காவல் நிலையத்தை எல்லைக்குட்பட்ட நெல்சன் மாணிக்கம் ரோடு மேத்தா நகர் பகுதியில் நாள்தோறும் பல அட்டூழியங்கள் நடந்துகொண்டிருக்கிறது இப்பகுதியில் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்கின்றனர். காவலரிடம் இதை பற்றி கேட்டால் எங்களுக்கு ஆட்கள் குறைவாக தான் இருக்கின்றார்கள் என்று காலம் காலமாக கூறப்படும் கதையே சொல்கின்றனர். திருடன்கலை பற்றி மீண்டும் கேள்வி கேட்டால் நீங்க வாட்ச்மேன் வச்சிக்க வேண்டியது தானே நீங்க சிசிடிவி ஏன் போடலை என்று பொது மக்களையே காவல்துறை திரும்ப கேள்வி கேட்கும் சூழ்நிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர். சைலேந்திரபாபு அவர்கள் டிஜிபியாக பொறுப்பேற்றவுடன் சட்டம் ஒழுங்கு சீராகும் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கையில் மீண்டும் அதே சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. அப்பகுதி வாசிகளின் பாதுகாப்பிற்கு இனியாவது காவல்துறை துணையாக இருக்குமா அல்லது மேலும் பல அட்டூழியங்கள் நடந்து கொண்டேதான் இருக்குமா என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags:

#robbery #thief #theft #rowdies #rowdy #gangs #இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday
Comments & Conversations - 0