• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகை மாவட்ட ஆட்சியர் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள். கூட்டத்தில் புகுந்து சென்று அலுவலர்களுக்கு டோஸ் விட்ட ஆட்சியர்

நாகை மாவட்ட ஆட்சியர் குறைதீர் நாள் கூட்டத்தில் குவிந்த பொதுமக்கள். கூட்டத்தில் புகுந்து சென்று அலுவலர்களுக்கு டோஸ் விட்ட ஆட்சியர்

செ.சீனிவாசன்

UPDATED: May 16, 2023, 9:32:32 AM

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மனுக்கள் அளிப்பதற்காக வேதாரண்யம், கீழ்வேளூர், திருமருகல், திருக்குவளை, தலைஞாயிறு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதற்கு முன்பாக சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் பொது மக்களின் மனுக்களை பெற்று ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அனுப்புவது வழக்கம். 

இந்த நிலையில் இன்று மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் குறைந்த அளவிலான பணியாளர்கள் இருந்ததால் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மாற்றுத்திறனாளிகளின் மனுக்களை பெற்ற பின் கூட்ட அரங்குக்கு சென்ற ஆட்சியர் அருண் தம்புராஜ் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை கண்டார்.

இதனையடுத்து மனுக்கள் பதிவு செய்யும் இடத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்ட ஆட்சியர் அங்கு போதிய பணியாளர்கள் இல்லாததால் வட்டாட்சியரை கடுமையாக கண்டித்தார்.

மேலும் இது குறித்து உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்து, பொதுமக்களை காத்திருக்க செய்யாமல் விரைந்து அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு பொது மக்களிடம் மனுக்களை வாங்க கூட்ட அரங்கிற்கு சென்றார்.

ஆட்சியரின் அதிரடி செயலை பார்த்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended