Author: ராஜ்குமார்

Category: அரசியல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் ரூ.593.70 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளை  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர்  கே. என். நேரு அவர்கள் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

இவ்விழாவிற்கு மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர்  கே. கே. எஸ். எஸ். ராமச்சந்திரன் அவர்கள்,  நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி நகராட்சி, திருவேங்கடம் பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு மத்திய மாநில அரசுகள் அம்ருத் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்புடன் ரூ.543.20 கோடி மதிப்பீட்டில்  இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம்  சங்கரன்கோவில் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் கொண்டாநகரம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கப்பட்டு அதன் முன்னே நீர் சேகரிக்கும் கிணறு ஒன்றின் மூலம் நீர் உந்தப்பட்டு கொண்டாநகரத்தில் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு மானூர் பணவடலிசத்திரம் ஆகிய இடைநிலை நீர் உந்து நிலையம் மூலமாக 66.06 கிலோமீட்டர் தூரம் குடிநீர் சங்கரன்கோயில் நீர் உந்து நிலையத்திற்கு கொண்டுவரப்படுகிறது.

சங்கரன்கோவிலில் அமைந்துள்ள 25.70 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர் தேக்க தொட்டியில் இருந்து புளியங்குடி நகராட்சிக்கு 19 கிமீ நீளமும் ராஜபாளையம் நகராட்சிக்கு 34 கிலோமீட்டர் நீளமும், சிவகாசி திருத்தங்கல்  உள்பட மாநகராட்சிக்கு 54 கிலோ மீட்டர் நீளமும்,

திருவேங்கடம் பேரூராட்சிக்கு 19 கி.மீபிரிவு குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்பட்டு மேற்படி நகராட்சி மற்றும் பேரூராட்சியில் அமைக்கப்பட்டுள்ள புதிய 22 மேல்நிலை தொட்டிகள் ஏற்கனவே உள்ள 33 மேல்நிலைத் தொட்டிகள் ஆக மொத்தம் 55 மேல்நிலைத் தொட்டிகள் மூலம் சுமார் 5 லட்சம் பொதுமக்களுக்கு குடிநீர் இத்திட்டத்தின் மூலம் விநியோகிக்கப்படுகிறது.

மேலும் இக்கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு நபர் ஒன்றுக்கு நகராட்சியில் 135 லிட்டர் வீதமும் பேரூராட்சியில் 90 லிட்டர் வீதமும் குடிநீர் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்துடன் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாகுடி ஒன்றியத்தைச் சார்ந்த 17 குக் கிராமங்கள் மற்றும் முக்கூடல் பேரூராட்சியின் ஒரு குக்கிராமம்,தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஒன்றியத்தைச் சார்ந்த 31 கூட்டு கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டம் ரூபாய் 50.50 கோடி மதிப்பீட்டில் இன்று பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.

மேலும் இத்திட்டத்தின் மூலம் 6 லட்சத்து 70 ஆயிரம் பொதுமக்கள் பயன் அடைவார்கள்.

இந்த நிகழ்ச்சியில்  அரசு கூடுதல் தலைமை செயலாளர், தமிழ்நாடு குடிநீர் குடிநீர் வழங்கல் துறை திரு.ஷிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வ.தட்சிணாமூர்த்தி, இ.ஆ.ப., நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, இ.ஆ.ப.,

மாவட்ட ஆட்சித் தலைவர்
துரை.ரவிச்சந்திரன், இ.ஆ.ப.,  தென்காசி பாரளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார், சங்கரன் கோவில் சட்டமன்ற உறுப்பினர்  ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் Dr.சதன் திருமலைக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:

#thenkasinews , #thenkasinewstodaylive, #thenkasinewstodayinenglish #dmk #knnehru #thenkasinewsintamil #thenkasinewstoday #thenkasinewsintamiltoday #thenkasitodaynewsintamil #surandainews #surandaitodaynews
Comments & Conversations - 0