Author: THE GREAT INDIA NEWS

Category:

சித்ரா பௌர்ணமி விழா : காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகம் சுழிக்க வைத்தது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில், என விளங்கும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் சித்ரா பவுர்ணமியையொட்டி கோவிலில் இருந்து புறப்பட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சை அரசந்தாங்கள், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியப்படி ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோவிலில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அக்கோவிலின் அருகில் பூமிக்கு அடியில் உள்ள நடவாவி கிணற்றில் இறங்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து, மண்டபத்தில் வைத்து, தீபாராதனை செய்து நெய்வேத்தியம் படைக்கப்பட்டது. பின்னர் , அங்கிருந்து புறப்பாடு நடைபெற்று விடியற்காலை செவிலிமேடு பாலாற்று படுகையில் வரதராஜர் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். *இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே பிரபந்தம் பாடுவதிலும், முன்னோற்றுதலின் போதும் வாக்கு வாதம் ஏற்பட்டு அவை கைகலப்பாக மாறி ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கி கொண்டனர்*. சித்ரா பௌர்ணமியையொட்டி 2 ஆண்டுகள் கழித்து நடைபெற்ற, இந்த பாலாற்றில் வரதப்பெருமாள் இறங்கும் வைபவத்தில், நடைபெற்ற இரு பிரிவினருக்கிடையேயான மோதலால், இந்நிகழ்வை காண வந்த 1000 க்கும் மேற்பட்ட பொது மக்களிடையே முக சுள்ளிப்பை ஏற்படுத்தியது. மேலும், காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற, சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை தென்கலை பிரிவினரிடையே ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே நன்மதிப்பை கெடுத்தது. ஒவ்வொரு பெரிய திருவிழாவின் போதும் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு, இதற்கு ஓர் நிரந்தர தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. காஞ்சிபுரம் செய்தியாளர் லட்சுமிகாந்த். இன்றைய செய்திகள் காஞ்சிபுரம் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,news,kanchipuram news,today tamil news,news tamil,crime

Tags:

Comments & Conversations - 0