• முகப்பு
  • tamilnadu
  • அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பரிசு இலவசம்.

அரசு பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பரிசு இலவசம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

அரசுப்பள்ளியில் மாணவர்களைசேர்த்தால் பெற்றோருக்கு டேபிள்ஃபேன் இலவசம். மாணவர்சேர்க்கை அதிகரிக்க ஆசிரியர்களின் நூதனமுயற்சி அரசுத்தொடக்க பள்ளி ஒன்றில் மாணவர்சேர்க்கை அதிகரிக்கும்வகையில் , தங்களதுகுழந்தைகளை பள்ளியில்சேர்க்கும் பெற்றோருக்கு டேபிள்ஃபேன் இலவசமாக பள்ளியின் சார்பில் வழங்கப் படும் என ஆசிரியர்களின் சார்பில் அறிவிக்கப் பட்டு உள்ளது . இந்தப்புது முயற்சி கிராமமக்களை வெகுவாககவர்ந்து உள்ளது . தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் மாதம் 13 ல் திறக்கப் படவுள்ளது . இந்நிலையில் , அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்சேர்க்கை தீவிரப் படுத்தி வருகின்றனர் . திருவள்ளூர்மாவட்டம் அத்திமாஞ் சேரி ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மாணவர்சேர்க்கை நடக்கவுள்ளது . அக்கிராம மக்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு அனுப்புவதில் ஆர்வம் கொண்டவர்களாகவுள்ளனர் . இந்நிலையில் , மாணவர்சேர்க்கை அதிகரிக்கும் நோக்கில் பள்ளித்தலைமை ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர்கள் இணைந்து மாணவர் சேர்க்கை அதிகரிக்க முடிவுசெய்தனர் . ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்கள் சேர்ந்தால் , மாணவர்களின்பெற்றோருக்கு பள்ளியின் சார்பில் டேபிள்ஃபேன் இலவசமாக வழங்கப்படும் என்றும் , தரமான இலவசக்கல்வி , கல்வி உபகரணங்கள் , காலைசிற்றுண்டி , மதியஉணவு வழங்கப்படும் என்றும் குறிப்பாக தனியார்ப்பள்ளி மாணவர்களுக்கு போட்டிபோடும் வகையில் அரசுப்பள்ளியில் தரமான கல்வி கற்றுத்தரப் படும் என்ற உறுதிகூறி மேற்கொண்ட விழிப்புணர்வு பிரசாரம் கிராமமக்களை வெகுவாககவர்ந்தது . இதன்காரணமாக , முதல் நாள் நான்கு பேர் பள்ளியில் சேர்ந்தனர் . அவர்களுக்கு பள்ளியின் சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் ஜான்சி பிரகாஷ் டேபிள்ஃபேன் வழங்கினர் . தொடர் பிரசாரங்கள் மேற் கொண்டு மாணவர்களை அதிகளவில் சேர்க்கவுள்ளதாக தலைமை ஆசிரியர் பூபதி தெரிவித்தார். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

RELATED NEWS

Recommended