Author: THE GREAT INDIA NEWS

Category: crime

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் மாணவி பிரேத பரிசோதனை அறிக்கை நேற்று வெளியானது யடுத்து மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புச் சேர்ந்த இளைஞர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் மாணவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு வருகிறது இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது.....!!!* கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கணியாமூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்த 12 ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் மாணவியின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் மாணவியின் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் உடல் கூறு ஆய்வு தொடங்குவதற்கு முன் 36 மணி முதல்48 மணி நேரத்திற்கு முன்பே மாணவி உயிரிழந்திருக்கலாம் என்றும் மாணவி இறப்பதற்கு முன் அவரது உடலில் காயங்கள் இருந்தன என்று நேற்று அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது மேலும் மாணவியின் உடைகளிலும் ரத்த கறைகள் இருந்தன - என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை யடுத்து மாணவியை கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . போராட்டத்தின் போது மாணவர்களை போலீசார் பேரி கார்டை வைத்து தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் மாணவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு கற்கள் வீசப்பட்டு வருகின்றனர் . தொடர்ந்து போராட்டக்காரர்கள் போலீஸ் பாதுகாப்புக்காக வந்த வேன்களை அடித்து நொறுக்கியும் பள்ளியின் முகப்புகளை கற்களால் அடித்து நொறுக்கியும் போராட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளிக்கிறது தொடர்ந்து மாணவியின் இறப்புக்கு நியாயம் கேட்டும் குற்றவாளிகளை உடனே கைது செய்யவும் பள்ளியின் தாளாளரை கைது செய்து அப்பள்ளியில் சீல் வைக்க வேண்டும் எனவும் மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பை சேர்ந்த இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கனியாமூர் அருகே சாலையின் இருபுறமும் 1000க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவருகிறது. இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

Tags:

#kallakurichinews #kallkurichinewstamil #kallakurichinewspaper #kallakurichinewschannel #kallakurichinewsyesterday #kallakurichinewslive #kallakurichimavattamnews ##இன்றையசெய்திகள்கள்ளக்குறிச்சி #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalkallakurichitamilnadu #indrayaseithigalkallakurichi #todaynewskallakurichi #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #kallakurichitodaynews #kallakurichilatestnews #kallakurichinews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews
Comments & Conversations - 0