Author: THE GREAT INDIA NEWS

Category: pondichery

புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி.. நேற்றைய தினம் புதுச்சேரிக்கு வந்திருந்த குடியரசு தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ரங்கசாமி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார், குடியரசு தலைவர் என்பவர் ரப்பர் ஸ்டாம்ப்பாக இருக்க கூடாது செயல்படுவராக இருக்கவேண்டும் என்றார். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத்திற்கும் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார் அதை திரும்ப பெறுவதற்கும் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்.குடியரசு தலைவர் என்பவர் நடுநிலையாக இருக்க வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக் கொண்டார். ஜனநாயக படி நடுநிலையாக செயல்படக்கூடிய குடியரசுத் தலைவர் வேட்பாளர் தான் யஸ்வந்த் சின்கா எனவே அவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். புதுச்சேரியில் உள்ள மதசார்பற்ற அணி யஸ்வந்த் சின்காவை ஆதரிக்கும் என்று தெரிவித்தார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி தோல்வி அடைந்த உள்ளது. மாநிலங்களுக்கு கிடைக்கும் இழப்பீடு தொகையை காலம் கடந்து மத்திய அரசு வழங்கி வருகின்றது. இதனால்தான் பல்வேறு மாநிலங்களில் ஜிஎஸ்டி யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஓர் கொடுத்ததாக தெரிவித்தார். காரைக்காலில் வயிற்றுப் போக்கு வாந்தியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் மாவட்டம் புதுச்சேரியில் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது காரைக்கால் மாவட்டம் மீது முதல்வருக்கு அக்கரை இல்லை காரைக்கால் புறக்கணிக்க பட்டு கேட்பாரற்று கிடப்பதாக குற்றம் சாட்டிய நாராயணசாமி அமைச்சர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரைக்கால் பாதிக்கப்பட்டதற்கு காரணம் என்றார். எனவே அரசுபோர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாராயணசாமி கேட்டுக் கொண்டார். மக்கள் மத்தியில் கொரோனா 4-வது அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாராயணசாமி பொது மக்கள் கவனமாகப் இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார் பேட்டி; நாராயணசாமி, முன்னாள் முதலமைச்சர் புதுச்சேரி. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

Tags:

#pondicherynewstoday #pondicherynewstamil #pondicherynewspapertoday #pondicherynewslivetoday #pondicherynews #இன்றையசெய்திகள்புதுச்சேரி #இன்றையசெய்திகள்புதுச்சேரிதமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் #indrayaseithigalpondichery #todaynewspondichery #todaynewstamilnadu #todaytamilnadunews #indrayaseithigalpondicherytamilnadu #indrayaseithigaltamilnadumavattangal #TheGreatIndiaNews #Tginews #news
Comments & Conversations - 0