• முகப்பு
  • political
  • இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் , அரசியல் பாதை . !

இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் , அரசியல் பாதை . !

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி. 1972 ம் ஆண்டு அதிமுகவில் இணைந்து பணியாற்றிய இபிஎஸ் - க்கு 1973 ம் ஆண்டு சிலுவம்பாளையம் கிளைக்கழகச் செயலாளர் பதவி கிடைத்தது. 1989 ம் ஆண்டு தேர்தலில் ஜெ . அணியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக எம்எல்ஏ - வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991 ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1998 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பியாக தேர்வானார். 2011 ம் ஆண்டு தேர்தலில் எடப்பாடி தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரானார். 2016 ம் ஆண்டும் 4 வது முறையாக எடப்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டு , மீண்டும் பொதுப்பணித்துறை அமைச்சரானார். 2017 ம் ஆண்டு பிப்ரவரி 16 - ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் . 2017 - ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வானார் இபிஎஸ். 2021 ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார். 2021 ம் ஆண்டு தேர்தலில் 65 எம்எல்ஏக்களை தமிழகத்தின் பலமிக்க எதிர்க்கட்சித்தலைவரானார் இபிஎஸ். 2022 ஜூலை 11 - ல் அதிமுக செயற்குழு - பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஒருமனதாக தேர்வு.

VIDEOS

RELATED NEWS

Recommended