மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு பேர் தீக்குளிக்க முயற்சி காவல் துறை தடுத்தது.

மாரிமுத்து

UPDATED: May 8, 2023, 2:54:20 PM

தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்த சேர்ந்த டேனியல் ராஜ் இவருக்கு சொந்தமான வீடு வடக்கு சோட்னடயன் தோப்பில் நாலு சென்ட் இடம் உள்ளது.

இந்த இடத்தின் மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும் என் மகளின் படிப்புக்காக கடந்த 2016 ஆம் ஆண்டு அய்யனார் என்பவரிடம் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து ஒரு லட்ச ரூபாய் வாங்கினேன் மாதம்தோறும் வட்டியை கரெக்டாக செலுத்தியுள்ளேன்.

இந்த நிலையில் 9.9 22 ஆம் ஆண்டு அய்யனாரிடம் சென்று எனது வீட்டு பத்திரத்தை தருமாறு கேட்டபோது இன்னும் பத்து லட்ச ரூபாய் தந்தால்தான் பத்திரத்தை தர முடியும் இல்லையென்றால் தர முடியாது என்று கூறிவிட்டார்.

என்னை மிரட்டி மீண்டும் பேப்பரில் கையெழுத்து பெற்றுள்ளார் இந்த நிலையில் 19.9.22 அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எனது குடும்பத்திற்கும் எனக்கும் மிரட்டல் விடுத்து வரும் அய்யனாரிடம் இருந்து என்னை காப்பாற்றுமாறும் எனது வீட்டு பத்திரத்தை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளேன் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகையால் எனக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த டேனியல் ராஜ் மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மன்னனை பறிமுதல் செய்து டேனியல் ராஜ் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு அளிக்க ஏற்பாடு செய்தனர்.

அது போல திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா மருதூர் ஊராட்சி சேர்ந்த அன்பு என்ற பெண்மணி தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள சிங்கந்தாகுறிச்சியில் குடியிருந்து வந்தேன் எனது கணவர் இறந்து 22 வருடங்கள் ஆகிறது எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது எனது கணவருக்கு சொந்தமான இடம் சிங்கந்தாகுறிச்சியில் உள்ளது.

இந்த இடத்தை எனது கணவருக்கு வரவேண்டிய சொத்தை பங்கு பிரித்து தர எனது கணவரின் அண்ணன் தர்மராஜ் அவருடைய மனைவி லட்சுமி உள்ளிட்ட ஐந்து பேர் சேர்ந்து கொண்டு சொத்தை பிரித்து தர மறுக்கின்றனர்.

சொத்தை கேட்டு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டுகின்றனர் புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த அன்பு தீக்குளிக்க முயற்சி செய்ததில் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் ஜமால் பெண்ணிடமிருந்து மன்னனை கேனை பறிமுதல் செய்து காவலர் உதவியுடன் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்க செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தும் இரண்டு பேர் மன்னனை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தது பரபரப்பாக அப்பகுதியில் சிறிது நேரம் நிலவியது.

VIDEOS

RELATED NEWS

Recommended