நைனாபுதூர் நீர் தேக்க தொட்டியின் அவல நிலை.

குமரி ஒற்றன்

UPDATED: May 12, 2023, 6:41:46 PM

கன்னியாகுமாரி மாவட்டம் புத்தளம் பேரூராட்சிக்கு உட்பட்ட நைனாபுதூர் என்ற கிராமத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மணவாள புரம் கூட்டு குடிநீர் திட்டத்தில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி சிதலமடைந்து எப்பொழுது வேண்டமானாலும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த குடிநீர் தேக்கத்தின் அருக்காமையில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம் இடிந்து விழும் நிலையில் உள்ள நீர் தேக்க தொட்டி அருகே குழந்தைகள் செல்வது பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

____________________________________________________

நீர் தேக்க தொட்டி அவல நிலையின் வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/CuI7QHzHZrI

____________________________________________________

அப்பகுதி மக்கள் இது குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும் ஒரு பலனும் இல்லை... இதை இடித்து விட்டு என்றைக்கு புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி அமைக்கபடும் என்ற ஆவலில் அப்பகுதி மக்கள் உள்ளனர்... 

மேலும் அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த குடிநீர் தொட்டியினால் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

VIDEOS

RELATED NEWS

Recommended