• முகப்பு
  • chennai
  • சென்னை மக்கள் இனி பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என இனி கைபேசியில் பார்க்கலாம்!!!

சென்னை மக்கள் இனி பஸ் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது என இனி கைபேசியில் பார்க்கலாம்!!!

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

சென்னையில் நகரப்பேருந்துகள் எந்த தடம் எந்த இடத்தில் வந்து கொண்டிருக்கிறது எத்தனை மணிக்கு நீங்கள் நிற்கும் பஸ் ஸ்டாப்புக்கு அந்த பேருந்து வந்து சேரும் என்ற விவரத்தை இனி உங்கள் கைபேசி மூலம் அறிந்துகொள்ளலாம். போக்குவரத்துத் துறை சார்பில் வடிவமைக்கப்பட்ட "சென்னை பஸ்" Chennai Bus app link https://play.google.com/store/apps/details?id=io.ionic.starter67676 என்ற புதிய செயலியை இன்று அறிமுகம் செய்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வெளியிட்டுள்ளார் அமைச்சர் சிவசங்கர். பேருந்தில் பயணிப்போர் நலன் கருதி இந்த " சென்னை பஸ் " என்ற செயலியானது போக்குவரத்துத் துறை சார்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் நகரப் பேருந்துகளின் எண்கள் மூலம் அது எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டிருக்கிறது நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை பயணிகள் துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இது அந்தந்த பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியின் உதவியால் செயல்படுவதாக கூறுகிறார்கள். ஏற்கனவே CHALO APP என ஒரு செயலி இதே பணியை செய்து வருகிறது. இருப்பினும் எல்லா பேருந்துகளிலும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு அது செயல்பட்டுக் கொண்டே இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். செய்தியாளர் பா. கணேசன் இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Chennai Bus App,chennai bus app

VIDEOS

RELATED NEWS

Recommended