• முகப்பு
  • crime
  • அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அமெரிக்காவில் இருந்தபடியே திண்டுக்கல்லில் உள்ள திருடர்களை ஓடவிட்ட வீட்டின் உரிமையாளர்.

அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் அமெரிக்காவில் இருந்தபடியே திண்டுக்கல்லில் உள்ள திருடர்களை ஓடவிட்ட வீட்டின் உரிமையாளர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திண்டுக்கல் எம்.வி.எம்.நகர் 4வது குறுக்குத் தெருவில் வசித்து வருபவர் லீனஸ். இவர் வழக்கறிஞராக தொழில்செய்து வருகிறார். இவரதுமனைவி பெக்கிகோமஸ். இவர் அரசுசுகாதாரத் துறையில் இணைஇயக்குனராக பணியாற்றிவருகிறார். இவர்களது மகள் டெலிசியாமேரி. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். வழக்கறிஞர் லீனஸ் தனதுமனைவியுடன் கடந்த 2 மாதங்களுக்குமுன்பு அமெரிக்காவில் உள்ளதனது மகளைபார்க்க சென்று விட்டார். இந்நிலையில், பலநாட்களாக பூட்டி கிடந்த வீட்டை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் நேற்று நள்ளிரவு 12.30 மணிஅளவில் வீட்டின்கதவை உடைத்து திருட முயன்றனர். முன்னதாக திருடர்கள் வீட்டின்நுழைவு வாயில் அருகே நின்றபோது லீனஸ் வீடு முழுவதும் பொருத்தியிருந்த அதி நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கேமராமூலம் அமெரிக்காவில் உள்ள அவரது கைப்பேசிக்கு சிக்னல் கிடைத்துள்ளது. இதையடுத்து லீனஸ் அமெரிக்காவில்இருந்தபடி தனது கைபேசிமூலம் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி வீட்டின் மின் விளக்குகளை உடனடியாக எரிய செய்து உள்ளார். இதைப்பார்த்த திருடர்கள் கேமராவை நோட்ட மிட்டனர். கேமரா இருப்பது தெரிந்தும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற நோக்கத்தில் மீண்டும் கொள்ளை முயற்சியில் ஈடுபட முயற்சி மேற்கொண்டுள்ளனர். இதை அறிந்த வழக்கறிஞர் லீனஸ் தனது வீட்டிலிருந்த மின் மோட்டாரை அமெரிக்காவில் இருந்தபடியே கைபேசி மூலம் இயக்கி உள்ளார். அதையும் பொருட்படுத்தாமல் கொள்ளையர்கள் வீட்டின்பூட்டை உடைத்து உள்ளேபுக முயன்றனர். இதையடுத்து தனது கைபேசி மூலம் அங்கிருந்த கேமராவில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கரில் கொள்ளையர்களை வழக்கறிஞர் லீனஸ் எச்சரிக்கை செய்துள்ளார். அவரது எச்சரிக்கையை கண்டதும் திருடர்கள் கொள்ளை சம்பவத்தில் இருந்து பின்வாங்க முயற்சிக்கவில்லை. எப்படியும் கொள்ளையடித்தே தீரவேண்டும் என்றநோக்கத்தில் மீண்டும் கொள்ளைமுயற்சியில் ஈடுபட்டபோது வழக்கறிஞர் லீனஸ்சாதுரியமாக செயல் பட்டு திண்டுக்கல் மேற்குகாவல் நிலையத்திற்கு அமெரிக்காவில் இருந்தபடியே தொடர்பு கொண்டுகொள்ளைச்சம்பவம் நடப்பதை அறிவித்து உள்ளார். இதையறிந்த கொள்ளையர்கள் காவல் துறையினர் அங்குவருவதற்குள் அங்கிருந்து தப்பிஓடிவிட்டனர். இதையடுத்து வழக்கறிஞர் லீனஸ் அங்கு நடந்தவற்றை போலீசாருக்கு ஆதாரத்துடன் விளக்கி உள்ளார். இந்த விளக்கத்தை பெற்ற காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செய்தியாளர்: பா. கணேசன்.

VIDEOS

RELATED NEWS

Recommended