Author: அருண்

Category: மாவட்டச் செய்தி

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொட்டையூர் கிராமத்தில் வசிப்பவர் பெரியசாமி இவரது மனைவி செல்லக்கிளி.

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இருவருக்கும் திருமணம் ஆகி வெளியூர் சென்று விட்டனர்.

பெரியசாமி மற்றும் அவரது மனைவி கொட்டையூர் பகுதியில் விவசாயம் செய்து வரும் நிலையில் வயல்களிலேயே வீடு அமைத்து தங்கி தனியாக வசித்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களாக துறையூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.

இந்த நிலையில் நேற்று 21.5.2023 இரவு திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த சூறைக்காற்று வீசியது.

சூறைக்காற்றில் பெரியசாமி வீட்டின் மேற்கூறையானது காற்றின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் கீழே சரிந்தது.

இரவு நேரம் என்பதால் வீட்டில் பெரியசாமி மற்றும் அவரது மனைவி அமர்ந்திருந்தனர்.

அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர், இதனால் பெரியசாமி மற்றும் அவரது மனைவி இரவு முழுவதும் மழையில் நனைந்தவாறு இருந்துள்ளனர்.

தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் ரவிசந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு தனது அறிக்கையை வருவாய்த் துறையினருக்கு சமர்ப்பித்துள்ளார்.

வீடு இழந்த நிலையில் பெரியசாமி மற்றும் அவரது மனைவி செல்லக்கிளி ஆகியோர் தற்காலிகமாக அண்டை வீட்டில் தங்கி உள்ளனர்.

Tags:

#trichynewstoday , #trichynewstamil , #trichynewspapertoday , #trichynewslivetoday , #trichynews , #rain #இன்றையசெய்திகள்திருச்சி , #இன்றையசெய்திகள்திருச்சிதமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடுமாவட்டங்கள் , #indrayaseithigaltrichy , #todaynewstrichy , #todaynewstamilnadu , #todaytamilnadunews , #indrayaseithigaltrichytamilnadu , #indrayaseithigaltamilnadumavattangal , #TheGreatIndiaNews , #Tginews , #news , #மணப்பாறை , #manapparailatestnews , #manapparaitodaynews , #manapparainews
Comments & Conversations - 0