• முகப்பு
  • pondichery
  • புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது

புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

புதுச்சேரியில் வருகின்ற 26 ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது இதில் பொது மக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு புதுச்சேரி ஒரு ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்டநீதிபதியும், உறுப்பினர் செயலருமான செந்தில்குமார் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நீதிபதி செந்தில்குமார்.. வழக்காளிகள் தங்கள் வழக்குகளை சமாதானம் செய்ய முடியாத குற்ற வழக்குகளை தவிர சமரச முறையில் பேசி தீர்த்துக் கொள்ளும், செக் மோசடி வழக்கு, சிவில் வழக்கு, குடும்ப நல வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், வாரிசு வழக்குகள், போன்றவைகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளதாக தெரிவித்த நீதிபதி செந்தில் குமார், கடந்த லோக் அதாலத் நீதிமன்றத்தில் 1300 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டதாகவும், தற்போது அதைவிட அதிகமான வழக்குகள் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். பேட்டியின்போது புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் குமரன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உடனிருந்தனர். பேட்டி; செந்தில்குமார், மாவட்ட நீதிபதி, புதுச்சேரி, பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended