Author: மகேஷ் பாண்டியன்

Category: அரசியல்

ஈரோடு வடக்கு மாவட்டம் பவானிசாகர் வடக்கு ஒன்றியம் உத்தண்டியூர் ஊராட்சி அய்யன் சாலை முதல் அக்கரை தத்தப்பள்ளி வரை 39.01 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியும், தொப்பம்பாளையம் பேருந்து நிலையம் தொடங்கி அம்மாபாளையம் மேட்டுப்பாளையம் சாலை வரை 76.08 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை,முடுக்கன் துறை ஊராட்சி புளியம்பட்டி சாலை தொடங்கி முடுக்கன் துறை ஆற்று படுகை வரை 29.40 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை துவக்கிவைத்தார்.

பவானிசாகர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் மார்க்கெட் சதுக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் அமையவிருக்கும் புதிய நியாய விலை கடை , மார்க்கெட் பகுதியில் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் அமைய உள்ள வடிகால் அமைக்கும் இடத்தை பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து பவானிசாகர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு எதிராக அமைய உள்ள தியாகி எம்.ஏ. ஈஸ்வரன் அவர்களின் மணிமண்டப வேலைகளை பார்யிட்டு,பகுடுதுறை பகுதியில் எரிவாயு தகனமேடை பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் பவானிசாகர் ஒன்றிய செயலாளர் மகேந்திரன் பேரூராட்சி தலைவர் மோகன் மற்றும் ஒப்பந்ததாரர் செல்வம் உட்பட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் கிளைக் கழக செயலாளர் வார்டு உறுப்பினர்கள் சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் மாவட்ட பிரதிநிதிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரசு திட்ட பணிகளை துவக்கி வைத்து பார்வையிட்ட நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா செய்தியாளர் சந்திப்பின்போது பவானி ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவது குறித்து மேட்டுப்பாளையம் சிறுமுகை நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் தலைவர்களிடம் இனிமேல் கழிவு நீர் கலக்காமல் இருக்க பாதுகாப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன்.

புதிய நாடாளுமன்றம் திறப்பது குறித்து...திமுக உட்பட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

உதறித்தனமான செயல் நேரு, இந்திரா காந்தி பெயர்கள் இடம் பெறக்கூடாது நேரு இத்தனை ஆண்டு காலம் இந்த இருக்கையில் அமர்ந்து இருந்தார் என்பதற்கான செம்பு பட்டயம் உள்ளது, அது இடம் பெறக் கூடாது நேரு பெயரை அழிக்க வேண்டும்.

மதச்சார்பற்ற கட்சி தலைவர்கள் யாராக இருந்தாலும் அதை அழிக்க வேண்டும் என்பதே மதவாத மோடி அரசின் நோக்கம்.இதற்கு 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வரும் அந்த முடிவை கொடுக்கக்கூடிய ஆற்றல் மிக்க தலைவராக தமிழக முதலமைச்சர் உள்ளார் எற பேட்டி அளித்துள்ளார் .

Tags:

#erodenews, #erodenewstoday , #raja #rasa #erodenewspapertoday , #erodenewspaper, #erodenewschannel , #erodenewsupdate, #erodelatestnews, #erodenews , #erodenewstodaylive , #erodelatestnews, #latestnewsinerode ,#TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #Tamilnewsflash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianews , #tamilpoliticalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday, #newstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்ஈரோடு , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalerode , #todaynewserodetamilnadu , #ஈரோடுசெய்திகள்
Comments & Conversations - 0