• முகப்பு
  • district
  • இந்திய விவசாயிகளுக்கு மோடி அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளது.

இந்திய விவசாயிகளுக்கு மோடி அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணம் அருகே திருநல்லூரில் இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் குணசேகரன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் கணேசன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் டி ரவீந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் இக்கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்திற்கிடையே செய்தியார்களை சந்தித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்து பேசிய மாநில துணை தலைவர் டி ரவீந்திரன், தமிழகத்தை பாலைவனமாகும் வகையில், கர்நாடகாவில், ஆளும் பாஜக, காவிரியின் குறுக்கே மேதாதுவில், புதிய அணை கட்ட முயற்சிக்கிறது, இதற்கு மத்திய அரசு துணை நிற்கிறது இதற்கு ஏற்பவே, காவிரி ஆணையத்தின் தலைவரின் பேச்சும் நடவடிக்கையும் அமைந்துள்ளது இதனை கண்டிக்கிறோம். அந்த பேச்சை ஆணையத் தலைவர் பெற வாபஸ் பெற வேண்டும் மத்திய அரசும், அணை கட்ட அனுமதிக்க கூடாது, இதற்காக மாநிலம் தழுவிய அளவில் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுக்க ஆலோசித்து வருகிறோம் டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதலின் போது, தாமதம் இன்றி உரிய காலத்தில் கொள்முதல் செய்யவும், திறந்த வெளி கிடங்குகளில் வைப்பதன் மூலம் லட்சக்கணக்காண நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வெய்யிலில் காய்ந்து அரசிற்கு பல கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்படுகிறது. இதனை தவிர்க்க, போதுமான அளவிற்கு செட்டுகள் அமைக்க வேண்டும் அதுபோலவே மத்திய அரசு, நெல்லுக்கான விலையை 2023க்கு கிலோ ஒன்றுக்கு ரூபாய் ஒன்று மட்டும் உயர்த்தி அறிவித்து உற்பத்தி செலவுகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், இந்திய விவசாயிகளுக்கு மோடி அரசு பெரும் துரோகம் இழைத்துள்ளது. கேரள அரசு குவிண்டல் நெல்லுக்கு ரூபாய் 2,850 ஆக அறவித்து கொள்முதல் செய்து வரும் வேலையில், உற்பத்தி செலவை கணக்கிட்டு அதனுடன் 50 சதவீதம் சேர்த்து விலையினை நிர்ணயம் செய்ய வலியுறுத்தும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையை ஏற்று செயல்பட வேண்டும் என்றும் டி ரவீந்திரன் மேலும் தெரிவித்தார். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended