Author: L.குமார்

Category: மாவட்டச் செய்தி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியம் பூங்குளம் ஊராட்சியில் 100 நாள் பணியாளர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யும் வேலைக்கு முறையாக ஊதியம் வங்கிக் கணக்கில் இருப்பு வைக்காமல் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அலுவலர்கள் காலதாமதம் செய்வதால் தாங்களுக்கு உணவு கூட வழியில்லாமல் இருப்பதாக குறை கூறி திடீரென பணியை புறக்கணித்து சாலையில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உடனடியாக சம்படத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகரை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ரமேஷ் ஆகியோரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் வீட்டு வரி மற்றும் தண்ணீர் வரியை அதிகப்படியாக வசூலிப்பதாக கூறி சிலர் குற்றம் சாட்டினர்.

தொடர்ந்து தண்ணீரே வராமல் தண்ணீர் வரி மட்டும் வாங்கிக் கொள்வது எவ்விதத்தில் நியாயம் எனவும் ஊரட்சி மன்ற தலைவராக ரோஜா இருக்கும்பட்சத்தில் அவரை புறம் தள்ளி ஊராட்சி மன்ற துணைதலைவர் ரமேஷ் அதிகாரித்தை எடுத்து கொண்டு மக்களை மிரட்டி வருவதாகவும் கிராம மக்கள் சரமாரியாக குற்றம்சாட்டி வட்டார வளர்ச்சி அலுவலரை முற்றுகையிட்டு சாரமரியாக கேள்வி எழுப்பினர்.

பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் விரைவில் 100 நாள் பணியாளரகளுக்கு ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகப்படியாக பதிவு செய்து ஈடுபட்டவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அளித்த உறுதியை ஏற்று போராட்டம் விளக்கிக் கொள்ளப்பட்டது.

Tags:

#thiruvallurnews , #thiruvallurnewsintamil , #thiruvallurnewslive , #thiruvallurnewstoday , #thiruvallurnewstodaytamil , #thiruvallurnewspapertoday , #இன்றையசெய்திகள்திருவள்ளூர் , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayasithigalthiruvallurtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews , #Tginews , #news , Tamil news channel , Tamil news Flash , Tamil news live tv ,#thiruvallurtodaynews , #thiruvallurlatestnews , #thiruvallurnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews , #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0