Author: THE GREAT INDIA NEWS

Category: district

போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மருவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பெரம்பலூர் முதல் மருவத்தூர் – குரும்பாளையம் வழியாக சென்ற பேருந்தினை க.எறையூர் வரை வழித்தடத்தினை நீட்டித்து பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து வேப்பூர் பேருந்து நிலையத்தில் பெரம்பலூர் முதல் வேப்பூர் வரை கல்லூரி மாணவிகளுக்கான கூடுதல் சிறப்பு பேருந்து சேவையினையும், பெரம்பலூர் முதல் வைத்தியநாதபுரம் வரை சென்ற பேருந்தை வேப்பூர் வரை நீட்டித்து பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து ரூ.2.77 கோடி மதிப்பீட்டில் வேப்பூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவியர் விடுதிக்கான புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்கள். பின்னர் அகரம் ஊராட்சியில் பெரம்பலூர் முதல் கிளியூர் வரை உள்ள பேருந்து சேவையினை வ.அகரம் வரை நீட்டித்து பேருந்து சேவையினை துவக்கி வைத்தார்கள். அதனைத்தொடர்ந்து சின்ன வெண்மணியில் ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் அருந்ததியர் தெரு மற்றும் ஆதிதிராவிடர் தெருக்களில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ,ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மருவத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி பூரணி என்பவரை கொடியசைத்து பேருந்து இயக்கத்தை துவக்கி வைக்கச் செய்தார். இந்நிகழ்வு அங்கிருந்த மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து அது கடைக்கோடி மக்கள் வரை சென்றடைவதில் தனி கவனம் செலுத்துவதனால் தமிழ்நாடு முதன்மையாக திகழ்ந்து வருகிறது. வேப்பூரில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பாக மாணவர்கள் விடுதி அமைப்பதற்கு ரூ.2.77 கோடி செலவில் கட்டிடங்கள் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதேபோல் வேப்பூர் அரசினர் மகளிர் கல்லூரிக்கு வருகின்ற மாணவர்களுடைய வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோல் பள்ளி மாணவர்களுடைய வசதிக்காக மருவத்தூர் குரும்பபாளையம் எறையூர் வரையிலான பேருந்து வழித்தடம் இன்றைக்கு துவங்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவிகளின் வசதிக்காக இன்று இந்த பேருந்து வழித்தடங்கள் துவக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடைய சேர்க்கையில் அடிப்படையில் தேவைப்பட்டால் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் மகளிருக்கென 21,000 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பயணிகளை தவறாக நடத்துகின்ற ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு பேட்டா வழங்கப்படுவதில்லை என்ற நீண்டகால பிரச்சினையினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு கடந்த வாரம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்கள். இந்நிகழ்வுகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக(கும்பகோணம்) மேலாண் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜ்மோகன், பொது மேலாளர் எஸ்.சக்திவேல், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்செல்வி மதியழகன், வேப்பூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தகருணாநிதி, வேப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் தனம் பெரியசாமி, முக்கிய பிரமுகர் மருவத்தூர் சி.ராஜேந்திரன், குன்னம் வட்டாட்சியர் அனிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

Tags:

#perambalurnewstamiltoday #dmk #transportminister #transportministersivashankar #ministershivashankar #sivashankar #perambalurnewspapertamil #perambalurnewstodaytamil #இன்றையசெய்திகள்பெரம்பலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalperambalurtamilnadu #indrayaseithigaltamilnadu #todaynewsperambalur #todaynewsperambalurtamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #perambalurtodaynews #perambalurlatestnews #perambalurnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0