Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

பகுதிநேர ஆசிரியர்கள் அனைவருக்கும் முக்கிய செய்தி. 25. 5.2022 காலை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை சந்திப்பதற்காக தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க நிர்வாகிகள் சென்னை அண்ணா பவள விழா நூலக கட்டிடத்திற்கு சென்றிருந்தோம் பள்ளி திறப்பதற்காக நிருபர்கள் மற்றும் ஊடகவியாளர்கள் மத்தியிலே மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேட்டி அளிக்கின்ற நிகழ்விற்கு முன்பாகவே நம் நலனில் என்றும் அக்கறை கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தந்திடிவி சங்கரன் அவர்கள், இடிவி ரவி அவர்கள், நியூஸ்18 விஜய் அவர்கள் போன்றோரிடம் நம் நிலை குறித்து கேள்விகள் கேட்க வேண்டும் என்ற வேண்டுகோளை வைத்தோம் அவர்களும் பகுதிநேர ஆசிரியர்களின் பணி நிரந்தர கோரிக்கை குறித்தும் போராட்டங்கள் குறித்தும் கேள்விகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களிடம் கேட்டனர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் கடந்த காலங்களில் சொல்கிற படிப்படியாக என்று சொல்வது போல் அல்லாமல் நிதி நிலைமை சீராகிய பிறகு மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் அதில் முதன்மையாக பகுதிநேர ஆசிரியர்கள் நிரந்தரப்படுத்த படுவார்கள் என்ற வாக்குறுதியை அளித்தார்கள் பேட்டி முடித்து வருகின்ற பொழுது நாம் வணக்கம் செலுத்தினோம் வாருங்கள் (உள்ளறையை காட்டி) அமருங்கள் என்று சொல்லி சென்றார் அவருடைய தொடர் நிகழ்வுகளை முடித்த பிறகு அவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்து போராட்ட பேச்சுவார்த்தையின்போது பேசிய கோரிக்கைகள் விளக்க மனுவினை முன்பதாகவே அளித்திருக்கிறோம் அதே மனுதான் இது என்று சொல்லியவுடன் மதிப்பிற்குரிய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களிடம் கொடுத்து இதற்கு விரைவில் நடவடிக்கை எடுங்கள் என்று அந்த மனுவை கொடுத்தார் பின்பு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்களை அணுகி தங்களிடமும் முன்பதாகவே இந்த விளக்க மனுவை கொடுத்திருக்கிறோம் என்று சொன்னபோது நீங்கள் கொடுத்த அந்த கோரிக்கை மனு அடிப்படையில் அத்தனை கோரிக்கைகளையும் அரசுக்கு கருத்துரு அனுப்பியுள்ளோம் பைனான்ஸ் விவகாரத்தில் மட்டும்தான் காலதாமதம் ஆகிறது என்று சொன்னார் அம்மா பள்ளி திறப்பதற்கு முன்பதாகவே நீங்கள் அறிவிப்பை வெளியிட்டால் நாங்கள் முழுநேர ஆசிரியராக ஒரு மதிப்புடன் பள்ளிக்கு செல்வோம் ஆகவே விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனும்போது தேதி குறிப்பிட்டு சொல்லமுடியாது முன்னே பின்னே ஆகும் விரைவில் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லியுள்ளார் பின்பு மாநில திட்ட இயக்குனர் அலுவலகத்திற்கு வந்து மாநில திட்ட இயக்குனர் அவர்களை சந்திப்பதற்கான நேரம் கேட்டோம் அவர் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்து கொள்ள இருப்பதால் நேரம் கிடைக்கவில்லை பிறகு ஏ எஸ் பி டி, டி இ ஓ , பைனான்ஸ் கண்ட்ரோலர் போன்ற அதிகாரிகளை சந்தித்து நம் கோரிக்கைகள் குறித்து எப்போது நடைபெறும் என்று விளக்கி கேட்டோம் பணியிட மாறுதலுக்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது எங்கெங்கு எந்தெந்த பள்ளியிலே பணி அமர்த்தலாம் அங்கு மாணவர்கள் எண்ணிக்கை கணக்கை கேட்டிருக்கிறோம் பணியிடங்களை காட்டி கவுன்சிலிங் வைத்து நடத்தலாமா அல்லது உங்களிடமே மனுக்களை பெற்று அருகாமையில் உள்ள பள்ளிகளில் கடந்த முறை போல் பணியமர்த்தலாமா என்று ஆலோசித்து கொண்டு இருக்கிறோம் எவ்வளவு பேருக்கு பணியிட மாறுதல் தேவைப்படுகிறது மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதல் எவ்வளவு பேருக்கு தேவைப்படுகிறது என்று உங்கள் ஆசிரியர்களிடம் கேட்டு ஒரு உத்தேச பட்டியலை நீங்களும் கொடுங்கள் என்று டி இ ஓ அவர்கள் தெரிவித்தார் பணி ஓய்வு காலத்தை ஐம்பதிலிருந்து அறுபது உயர்த்துவதற்கான நடவடிக்கை என்ன ? எப்போது நடைபெறும் என்று பைனான்ஸ் கண்ட்ரோலர் இடம் கேட்டறிந்த போது அவர்கள் இன்னும் ஓரிரு வாரத்திற்குள் அந்தந்த மாவட்ட சி இ ஓ களுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு விடும் என்று சொல்லியுள்ளார் ஆகவே நிதி நிலைமை சீராக ஓரிரு ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற காரணத்தினாலே நமது பணி நிரந்தர கோரிக்கையும் காலதாமதமாகும் என்ற காரணத்தினால் தான் ஊதிய உயர்விற்கு போராட்ட காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பேசிவிட்டு வந்த பிறகு போராட்ட களத்திலேயே போராட்ட களத்தில் பங்கெடுத்த அனைவரிடமும் கருத்து கேட்டறிந்து அதற்கு ஒப்புக் கொண்டோம் வர இருக்கிற ஊதிய உயர்வில் நமக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் கல்வியாண்டின் அனைத்து வேலை நாட்களும் முழுநேரப் பணி , எஸ் ஆர் ஓபன் செய்தல், பி எஃப், இ எஸ் ஐ பிடித்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம் அதனையும் கிட்டத்தட்ட நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்து உள்ளார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் இருப்பினும் பணி நிரந்தரம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பயணிக்கின்ற பொழுது நிதி நிலைமையை காரணம் காட்டி காலதாமதமாகும் என்ற காலச் சூழல் நிலவுவதால் நாளைக்கு கிடைக்கின்ற பலா பழத்தை விட இன்றைக்குக் கிடைக்கின்ற கிளாப்பழம் சிறப்பு என்ற அடிப்படையிலேயே தற்காலிகமாக இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம் ஆனால் விரைவில் நாம் பணிநிரந்தரம் அடைவதற்க்கான கோரிக்கையை என்றென்றும் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவோம் அதுவரை தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர் சங்கத்தின் சார்பில் தொடர் முயற்சிகளும் தொடர் போராட்டங்களும் கட்டாயம் நடத்தி நம்முடைய கோரிக்கையை வென்றெடுப்பதற்கான காலச் சூழலை உருவாக்குவோம் என உறுதி அளிக்கின்றோம் இந்நிகழ்வில் என்னுடன் தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில நிர்வாகிகள் சென்னை ஹரிஹரன், சென்னை முத்துக்கருப்பன், சேலம் ராம கேசவன் பங்கெடுத்தனர் இவ்வாறு தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க மாநில தலைவர் சேசுராஜா கூறினார். செய்தியாளர் பா. கணேசன் (அனுபவஸ்தன்)

Tags:

#இன்றையசெய்திகள்தமிழ்நாடு #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழகம் #நகராட்சி #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnadunewstodaytamil #tamilnaduflashnewstamil #corporation
Comments & Conversations - 0