• முகப்பு
  • aanmegam
  • கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெற்கு வீதியில் உள்ள, ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் தெற்கு வீதியில் உள்ள, ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கும்பகோணத்தில் சாரங்கபாணி தெற்கு வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மந்தை மகா காளியம்மன் திருக்கோயில், உலக உயிர்களுக்கெல்லாம், இச்சா சக்தி, ஞான சக்தி, மற்றும் கிரியா சக்தி ரூபமாகவும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல், என விளங்கும் அன்னை பராசக்தி இத்தலத்தில் வேண்டுவோருக்கு வேண்டுவன அருளும், ஸ்ரீ மந்தை மகா காளியம்மனாக அருள்பாலிக்கிறார். இத்தகைய பிரசித்தி பெற்ற சக்தி ஸ்தலத்தில், பல ஆண்டுகளுக்கு பிறகு, கும்பாபிஷேக திருப்பணிகள் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நிறைவு பெற்றதை தொடர்ந்து, நேற்று 8ம் தேதி யாகசாலை பூஜை கணபதி ஹோம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி, கோ பூஜை ஆகியவற்றுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி, இன்று காலை 2ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெற்று, மகா பூர்ணாஹ_தி சமர்பிக்கப்பட்டு, மகா தீபாராதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து, நாதஸ்வர, மேள, தாள, மங்கள வாத்தியங்கள் முழங்க, புனிதநீர் நிரப்பிய கடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பட்டு, தசமி திதி, ஹஸ்த நட்சத்திரம், கடக லக்னத்தில், புனிதநீரை கோபுர கலசத்தில் ஊற்ற, மகா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது, இதில் ஸ்ரீ ல ஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்துகொண்டு மக்களுக்கு அருளாசி வழங்கினார். இந்த கும்பாபிஷேகத்தில் சுற்றியுள்ள பகுதியில் இருந்து ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர். கும்பகோணம் செய்தியாளர் ரமேஷ்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended