பேரறிவாளன் விடுதலை.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் விடுதலை... பேரறிவாளனின் ரியாக்‌ஷன்என்ன? அவரைவிடுதலை செய்யக் கோரி அவரதுதாய் அற்புதம்மாள் பலகாலம் சட்டப் போராட்டம் நடத்தி வந்தார். தமிழ்நாடு அமைச்சரவையும் பேரறிவாளனைவிடுதலை செய்யவேண்டுமென தீர்மானம்நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால் அந்தத்தீர்மானத்தின் மீது பலமாதங்களாக ஆளுநர் பாரா முகத்துடன் இருந்தார். இதனால் பேரறிவாளின்விடுதலை தள்ளிப் போய்க்கொண்டேஇருந்தது. ஆளுநரின் இந்தமெத்தனத்திற்கு தமிழ்நாட்டு அரசியல் கட்சியினர்முதல் சாமானியர்கள்வரை கண்டனம்தெரிவித்தனர். இந்தச்சூழலில் ராஜீவ்காந்திகொலை வழக்கில்இருந்து பேரறிவாளனைவிடுவிக்க கோரியவழக்கு இன்று விசாரணைக்குவந்தது. வழக்கைவிசாரித்த நாகேஸ்வரராவ் தலைமையிலானஅமர்வு பேரறிவாளனை முழுமையாகவிடுதலை செய்து தீர்ப்பளித்தது. இதன் மூலம் பலவருட காத்திருப்பு முடிவுக்குவந்திருக்கிறது. இந்நிலையில் வழக்குதீர்ப்பை கேட்ட போது பேரறிவாளன் ஆனந்தகண்ணீர் வடித்தார். அவரை அணைத்துக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டவர்களையும் அவர்தேற்றினார். வழக்கிலிருந்து, நிச்சயம் விடுதலைஅடைவோம் என்றநம்பிக்கை பேரறிவாளனுக்கு ஆழமாகவே இருந்திருக்கிறது. அதனால் இந்தத்தீர்ப்பில் அவர் ஆச்சரியப் படுவதற்கு எதுவுமில்லை எனபலர் கூறுகின்றனர். செய்தியாளர்: பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended