• முகப்பு
  • district
  • மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் பல்வேறு கிராமங்களில் முறையாக செயல்படுத்தப்படவில்லை .

மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் பல்வேறு கிராமங்களில் முறையாக செயல்படுத்தப்படவில்லை .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவரும் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் கௌதமசிகாமணி தலைமையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய திருநாவலூர் ஒன்றியக் குழுவின் தலைவர் சாந்தி மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ஜல் ஜீவன் மிஷின் திட்டம் என்பது மிகச் சிறந்த திட்டம் . வீட்டிற்கு வீடு குடிநீர் வசதி அமைக்கும் திட்டம் இந்த திட்டமானது ஒரு சில கிராமங்களில் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஒரு சில கிராமங்களில் முறையாக செயல்படுத்தப் படவில்லை என்றும் குறிப்பாக திருநாவலூர் ஒன்றியத்திற்குட்பட்ட நைனாக்குப்பம் கிராமத்தில் ஜல் ஜீவன் மிஷின் திட்டத்தின்கீழ் குழாய்கள் அமைக்கப்பட்ட போதிலும் அதில் முறையாக குடிநீர் வருவதில்லை என்றும் ஜல் ஜீவன் மெஷின் திட்டத்தின் கீழ் குழாய்கள் அமைக்கப்பட்ட போதிலும் குடிநீர் வராததால் பொதுமக்கள் பக்கத்திலுள்ள கிராமத்திற்குச் சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை இருந்து வருவதாகவும் அந்தப் பகுதி மக்களுக்கு பயன் பெறும் வகையில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தை முறையாக செயல்படுத்தப்பட வேண்டும் . மேலும் திருநாவலூர் ஒன்றியத்தில் குடிசைகள் அதிக அளவில் இருந்து வருவதால் அந்த பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் . கோரிக்கை வைத்தார் தொடர்ந்து பேசிய திருக்கோயிலூர் நகர மன்ற தலைவர் திருக்கோவிலூர் நகராட்சியில் போதிய தூய்மைப் பணியாளர்கள் இல்லை என்றும் தூய்மைப் பணியாளர் களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும் திருக்கோவிலூர் நகராட்சியில் பொறியாளர்கள் இதுவரை பணியமர்த்த படவில்லை என்றும் சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தொடர்ந்து பேசிய கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பு குழு தலைவருமான போன்ற பொன் கௌதமசிகாமணி மத்திய மாநில அரசின் திட்டங்கள் பொது மக்களை சென்றடையும் வகையில் அதிகாரிகள் செயலாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார் . மேலும் வரும் காலங்களில் நடைபெற உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் அறிக்கை முழுமையான அறிக்கையாக இடம் பெற வேண்டும் என்றும் அதிகாரிகளை அறிவுறுத்தினார் . இந்த கூட்டத்தில் பேசிய கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவ வார்டில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாகவும் மேலும் வேளாண் துறை சார்பில் வழங்கப்படும் உபகரணங்கள் முறையான பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் அரசின் சார்பில் நடைபெறும் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் குறைந்தபட்ச நபர்களுக்கு மட்டும் உபகரணங்கள் வழங்கப்படுவதாகவும் தகுதியான நபர்களுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டினார் . அதிகாரிகள் மனசாட்சியுடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார் இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்

VIDEOS

RELATED NEWS

Recommended