• முகப்பு
  • chennai
  • தரமற்ற சாலைகளால் குறையும் திமுகவின் செல்வாக்கு .

தரமற்ற சாலைகளால் குறையும் திமுகவின் செல்வாக்கு .

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ஜூன் 1 , 2 - ந் தேதிகளில் தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது . கூட்டத்தில் தேர்தல் அறிக்கை மூலம் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் , நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார் . நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பார் என்றும் , திட்டங்களை அமல்படுத்துவதில் தீவிரம் காட்டாமல் இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்றும் கூறப்படுகிறது . சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் புதிதாக போடும் தார் சாலை குறிப்பாக கோயம்பேடு நெற்குன்றம் பகுதியில் பாதாள சாக்கடை புதிதாக போடப்பட்டு அதன் மீது தார் சாலை போடப்பட்டு வருகிறது அந்த தார்சாலை மிகவும் தரம் அற்ற நிலையில் இருக்கின்றது. இதனால் இனிவரும் காலங்களில் இப் பகுதியில் திமுகவின் செல்வாக்கு குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது இதனை சரி செய்வாரா. இதேபோல் தமிழகம் முழுவதும் போடப்படும் தரமற்ற சாலைகளால் திமுகவின் செல்வாக்கு குறையும். இதனை சரி செய்வாரா பொறுத்திருந்துதான் பார்க்கணும். செய்தியாளர் பா. கணேசன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended