• முகப்பு
  • district
  • வையம்பட்டி சூர்யா நர்சிங் கல்லூரி வளாகத்தில் லட்சம் கிலோமீட்டரை நெருங்கும் லட்சிய நடைபயணம் துவக்க விழா.

வையம்பட்டி சூர்யா நர்சிங் கல்லூரி வளாகத்தில் லட்சம் கிலோமீட்டரை நெருங்கும் லட்சிய நடைபயணம் துவக்க விழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி சூர்யா நர்சிங் கல்லூரி வளாகத்தில் தேசபக்தி மற்றும் காந்திய சிந்தனைகளை வலியுறுத்தி, விழிப்புணர்வு நடைபயணங்களை மேற்கொண்டுவரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த காந்திய தம்பதியரான கருப்பையா- சித்திரா அவர்களின் தேசநலனுக்கான அறிவியல் மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு நடைபயணம் தொடங்கப்பட்டது. இந்த நடை பயணம் வையம்பட்டியிலிருந்து ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் மற்றும் பெங்களூரு இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகிய இடங்களை நோக்கிய 1000 கிலோமீட்டர் நடந்தே செல்வது என்று திட்டமிட்டு தொடங்கப்பட்டது . சூர்யா நர்சிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில் வையம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும், சூர்யா நினைவு அறக்கட்டளையின் நிறுவனருமான சூர்யா சுப்பிரமணியன் நடைபயணத்தை கொடியசைத்து துவங்கி வைத்தார். சூர்யா நர்சிங் கல்லூரியைச் முனைவர் நாகலெட்சுமி முன்னிலையில் ஊரக மேம்பாடு மற்றும் சூழலியல் பாதுகாப்பில் கவனம் செலுத்திவரும் ஃபார்ம் இந்தியா நிறுவனத்தின் தலைவர் தங்கப்பாண்டியன் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார், கடந்த நடை பயணத்தின் போது ஏற்பட்ட விபத்தில் கால்களை இழந்த நிலையிலும் சக்கர நாற்காலியின் உதவியுடன் கணவருடன் இணைந்து தேசப்பணியாற்றிடும் . சித்திரா அவர்களின் மன உறுதியை பாராட்டினார்கள். இதுவரை பல்வேறு தேசபக்த காரனங்களுக்காக 96600 கிலோமீட்டர் நடைபயனம் மேற்கொண்டதற்காக இத்தம்பதியினரின் பெயர்கள் இந்தியன் புக் ஆஃப் ரெகார்ட்ஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சூர்யா பாராமெடிக்கல் கல்லூரியைச் சார்ந்த மாணவிகளும் பேராசிரியர்களும் இந்த தொடக்க விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் . மணப்பாறை நிருபர் லட்சுமணன்.

VIDEOS

RELATED NEWS

Recommended