• முகப்பு
  • tamilnadu
  • பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டி டிபிஐ வளாகத்தில் நடைபெற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

பகுதி நேர ஆசிரியர்கள் எப்போதெல்லாம் போராட்டம் செய்கிறார்களோ அப்போதெல்லாம் ஏதாவது ஒன்றை சொல்லி போராட்டதை கலைப்பதே வாடிக்கையாகிவிட்டது. கலைஞரின் திறமை ஸ்டாலிடம் காண முடிய வில்லை என பகுதி நேர ஆசிரியர்கள் புலம்பினார்கள். தற்போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறு அளவிலான மகிழ்ச்சியான அறிவிப்பு. இதுவரை நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக சில கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் பணி நிரந்தரம் தற்போதைக்கு இல்லை என கைவிரிக்கப்பட்டது. நிதி நிலைமையைப் பொறுத்து நிறைவேற்றப்படும் என்று அரசு தரப்பில் கூறியுள்ளார்கள். நிதி நிலைமை கொண்ட திட்டங்களை வகுத்து செலவு செய்தால் எப்படி நிவர்த்தியாகுமோ தெரியாது என பகுதி நேர ஆசிரியர்கள் வருத்தப்பட்டனர். தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் : 1. ஐந்து நாட்கள் பணி, SR, ESI, PF உடன் ஊதிய உயர்வு. 2. ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 60 வரை உயர்த்துவதற்கான அரசாணை. 3. பணி இட மாறுதல் இவை அனைத்தும் நிதி துறையிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்ற ஒப்புக்கொண்டுள்ளார்கள். ஆனால் இதை செயல் படுத்த மூன்று மாதங்கள் ஆகலாம் என கூறியுள்ளார்கள், தொடர் முயற்சிகள் தமிழக சிறப்பாசிரியர்கள் சங்கம் மூலம் எடுக்கப்படும் என பகுதி நேர ஆசிரியர்கள் சங்கத் தலைமை கூறியது. மேற்படி கோரிக்கைகளை ஏற்று போராட்டம் நிறைவு பெற்றது என தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்க தலைவர் கூறியதும் அனைவரும் கலைந்து சென்றனர். இவ்வாறாக மூன்று நாட்கள் நடந்த பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இன்று முடிவுக்கு வந்தது. செய்தியாளர் பா. கணேசன்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended