Author: செ.சீனிவாசன்

Category: மாவட்டச் செய்தி

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் பாலக்குறிச்சியில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியில் மின் பற்றாக்குறை நிலவி வருவதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி குறைந்த மின்னழுத்தம் காரணமாக மின்சாதன பொருட்களும் அவ்வபோது பழுதடைவதோடு, குடிநீர் வழங்குவதிலும் பல்வேறு சிக்கல்கள் இருந்து வந்துள்ளன.

ஆகவே மின் பற்றாக்குறையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை குறித்த செய்தி பேட்டியுடன் தி கிரேட் இந்தியாவில் அண்மையில் வெளியானது.

அதன் எதிரொலியாக 63 கிலோ வாட் மின் திறன் கொண்ட புதிய மின்மாற்றி பாலக்குறிச்சி பேருந்து நிறுத்தம் அருகில் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் அதன் மூலமாக சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின்சாரம் பகிர்ந்து இன்று முதல் வழங்கப்படுகிறது. இதனை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி பி நாகை மாலி, ஆகியோர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் அருணகிரி, ஒன்றிய கவுன்சிலர் லென்ஸ் சோயா சிவபாதம், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாத்தியா ஆரோக்கியமேரி, நாகை செயற்பொறியாளர் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிலவி வந்த மின் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் வகையில் புதிதாக மின் மாற்றி திறக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலமுறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில் செய்தி எதிரொலியாக தீர்வைப் பெற்றுத் தந்த தி கிரேட் இந்தியாவிற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர். 

Tags:

#nagainews , #nagainewsintamil , #nagapattinamnewslive , #nagainewstoday , #nagapattinamnewstodaytamil , #nagapattinamnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #nagapattinamtodaynews , #nagailatestnews , #Nagapattinamnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0