திராவிட அரசின் மாபெரும் சாதனை

மாரிமுத்து

UPDATED: May 31, 2023, 10:43:25 AM

தூத்துக்குடி மாநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலையோரத்தில் கீரை வியாபாரம் செய்த கீரை வியாபாரி அதிகாலையில் காய்கறி மார்க்கெட் சிக்னல் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு வியாபாரத்திற்கான கீரைகளை எடுத்து வைத்துவிட்டு அண்ணா சிலையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேளியில் எதார்த்தமாக அவரது கைப்பட,

வேளியில் மாநகராட்சி நிர்வாகத்தால் அந்த சிலைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக அந்த இரும்பு வேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்தது, இது அறியாத கீரை வியாபாரி சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி தனது உயிரை இழந்தார்.

ஆனால் இந்த மாவட்ட நிர்வாகம் அந்த உயிரிழப்பு வெளியே தெரியாதவாறு மிக தெளிவான முறையில் இந்த விஷயத்தை மூடி மறைத்துள்ளனர்.

கள்ளச்சாராயத்தை குடித்து தனது உயிரை இழந்த 23 நபர்களுக்கு 10 லட்சம் வழங்கிய விடியல் அரசு வரும் காலங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் பத்து லட்சம் கிடைக்கும் என்ற எண்ணத்தை மக்களிடத்தில் விதைத்த விடியல் அரசு,

குடும்பத்தை காத்திட உழைக்கும் வர்க்கமான சாலையோரத்தில் வியாபாரம் செய்யக்கூடிய ஏழை எளிய வியாபாரியான கீரை வியாபாரி தனது உயிரை மாநகராட்சியின் அலட்சியப் போக்கால் இழந்ததால், அவரது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறது. இத்தகைய இறப்பிற்கு இந்த விடியலரசு என்ன செய்துள்ளது. 

சாராய வியாபாரத்தில் யாரும் எதுவும் பேசி விடக்கூடாது, விமர்சனங்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அவர்களுக்கு உதவித்தொகையை அறிவித்த விடியலரசு. இது போன்ற மாநகராட்சி அலட்சிய போக்கால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கு கைமாறு தான் என்ன ? 

சாராய வியாபாரத்திற்கு உறுதுணையாக இருக்கிறதா ? இந்த அரசு.

தமிழக அரசே, உடனடியாக இந்த அப்பாவி கீரை வியாபாரி குடும்பத்திற்கு தகுந்த இழப்பீட்டுத்தொகையும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு உத்தியோகமும் வழங்கிட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் சார்பாக தா_வசந்தகுமார் மாநில செயலாளர் இந்து மக்கள் கட்சி- தமிழகம் கோரிக்கை வைத்துள்ளனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended