• முகப்பு
  • அரசியல்
  • அனைத்து சேவைகளையும் ஆன்லைன் ஆக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

அனைத்து சேவைகளையும் ஆன்லைன் ஆக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம் - பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

TGI

UPDATED: Mar 31, 2023, 7:28:35 AM

அனைத்து சேவைகளையும் ஆன்லைன் ஆக்க வேண்டும் என்பது தான் அரசின் நோக்கம், மக்களுக்கு தேவையான அனைத்து சேவைகளும் எளிதாக கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதி ஆண்டிமடம் வட்டத்திற்கு சார்நிலை கருவூலம் அமைக்க அரசு ஆவண செய்யுமா என ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.கண்ணன் எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன், 

ஜெயங்கொண்டம் தொகுதியில் புதிய சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக ஜெயங்கொண்டம் திருவிழா தனக்கு ஆணையத்திடம் இருந்து கருத்துரு பெறப்பட்டு பரிசீலனையில் இங்கிருந்து வருகிறது. கருவூல கடைக்கு தடுக்க துறை மறு சீரமைப்பு செய்யப்பட்ட பிறகு அங்கு சார்நிலை கருவூலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தமிழக முதலமைச்சர் அவர்கள் மக்களை தேடி தேடிச் சென்று அவர்களுக்கான சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார் அதுதான் இந்த அரசின் நோக்கமாக இருக்கிறது.

அதுமட்டுமின்றி மக்களுக்கான சேவைகள் கிடைக்க அனைத்து ஊராட்சிகளிலும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

போக்குவரத்து துறை அமைச்சர் ஊர் என்பதால் அது குறித்து மீண்டும் பரிசளிக்கப்படும் என்றார்,

அப்போது உன்கிட்ட சபாநாயகர் அப்பாவு திசையன்விளை பகுதிக்கும் ஆறுநிலை கருவூலம் அமைக்க ஏற்கனவே மனு கொடுத்து இருக்கிறேன் அதையும் அமைச்சர் பரிசீலிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

அப்போது பேசிய பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அனைத்தையும் ஆன்லைன் சேவைகளாக மாற்ற வேண்டும் என்பதுதான் அரசின் திட்டம் அதை நோக்கி தான் அரசு சென்று கொண்டு இருக்கிறது தகவல் உரிமை போல மக்களுக்கான சேவை உரிமை நிலை நாட்டப்படும் மக்களுக்கான சேவைகள் எளிதாக கிடைக்க ஆன்லைன் சேவை மேம்படுத்தப்படும் என்றார்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended