Author: முத்தையா

Category: மாவட்டச் செய்தி

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சேலம் பெருங்கோட்டத்தின் ஒருபகுதியான நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங்களின் அக்கட்சி மாவட்டத் தலைவர்கள், பார்வையாளர்கள், மையக்குழு கூட்டம், நாமக்கல்லில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள மாவட்ட பாஜக புதிய அலுவலகத்தில்  (15.05.2023)  நடைபெற்றது.

இதில், பாஜக மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்டப் பொறுப்பாளருமான முன்னாள் எம். பி.,டாக்டர் கே. பி. இராமலிங்கம் தலைமை வகித்தார்.  

அப்போது பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பெருங்கோட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், கரூர் மாவட்டங்களில் பாஜக தலைவர்கள் நிர்வாகிகள் ஆகியோரிடம், டாக்டர். கே.பி. இராமலிங்கம், கட்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினார். 

அதன் பின்னர், கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம்,

எப்பொழுதும் சட்ட ஒழுங்கு பிரச்சனை இல்லாத நாமக்கல் மாவட்டத்தில், 30 ஆண்டுகள் இல்லாத வகையில், பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு எந்த சம்பவமும் நடைபெறவில்லை.

ஆனால் சமீபத்தில் ஜேடர்பாளையம் அருகில் வடகரையாத்தூர் பகுதியில் ஆடு மேய்கும் இளம்பெண் நித்தியா மானபங்கபடுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக, ஒரு மர்ம கும்பல் கரும்பு ஆலைக்கு வட மாநில தொழிலாளர்கள் தூங்கிய கரும்பு ஆலை கொட்டைகைக்கு மண்ணெண்ணை குண்டு வீசி தீ வைத்த தாக்குதல் சம்பவம் நடந்ததுள்ளது.

பாரதிய ஜனதாவை பொறுத்தவரை மாநில தலைவர் கே. அண்ணாமலை வழிகாட்டுதலின்படி, இந்த சம்பவத்தை நாங்கள் அணுகுகிறோம். 

இந்த சம்பவத்தில் பாஜகவை பொறுத்தவரை காவல்துறை நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. 2023 மார்ச் மாதத்தில் பெண் கொலை செய்யப்பட்ட ஆரம்பத்திலிருந்தே பல்வேறு பிரச்சனைகள் இது தொடர்பாக ஏற்பட்டது. அப்போதே அவற்றை தடுத்திருக்க வேண்டும்.

பொதுவாகவே தமிழகத்தில் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை என பாஜக ஆரம்பத்தில் இருந்து குறை கூறி வருகிறது. சிறு சம்பவம் நடந்த உடனேயே அதை சுற்றியுள்ள பகுதிகளில் பின் விளைவுகளை முன்கூட்டியே அறிந்து காவல்துறை கண்காணித்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இதில் ஒட்டுமொத்தமாக உளவுத்துறை தோல்வி அடைந்து விட்டது என்பதே எங்களுடைய குற்றச்சாட்டு. என்று கூறிய டாக்டர் கே. பி. இராமலிங்கம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. 

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கூட ஏற்கனவே பாஜக இதுகுறித்து அறிவுறுத்தி இருந்தது. 

ஆனால் உளவுத்துறை அப்போதும் சரியாக செயல்படவில்லை. அதனால் மிகப்பெரிய அளவில் வன்முறை அங்கு நடந்தது அதன் தொடர்ச்சியாகத்தான் நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையத்திலும் வன்முறை நடைபெற்றுள்ளது. 

காவல்துறையினர் அணி வகுப்பு நடத்தினால் மட்டும் போதாது. கிராமந்தோறும் உளவுத்துறையை அனுப்பி, கபிலர்மலை மற்றும் பரமத்தி வேலூர் வட்டாரங்களில் உள்ள அனைத்து கிராமங்களில் காவல்துறை நேரடி கண்காணிப்பில் இருக்க வேண்டும்.

மக்களை துன்புறுத்தக் கூடாது. புலனாய்வு துறை அங்கு சரியான தகவலை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறைக்கு தெரிந்திருந்த போதிலும் மெத்தனமாக உள்ளனர். அதை கைவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் 

பாஜகவை பொறுத்தவரை இந்த சம்பவத்தில் உண்மை கண்டறியும் குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அது அமைதி குழுவாகவும் செயல்படும்.

நாமக்கல் மேற்கு பாஜக மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் தலைமையில், மாவட்டத் துணைத் தலைவர்கள் வடிவேல், பழனியப்பன், சபரிமலை வடக்கு ஒன்றிய பூபதி, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய வழக்கறிஞர் சசி தேவி ஆகிய 5 பேர் கொண்ட குழுவினர் 5 நாள்களில் உரிய விசாரணை செய்து பா. ஜ. க கட்சி ரீதியாக இந்த சம்பவத்தில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்களோடு இணைந்து நல்லுறவை பேணிக் காக்கும் வகையில் செயல்பட உள்ளோம் .

அனைத்து அரசியல் கட்சியோடு இணக்கமாக இருந்து இந்த குழுவினர் செயல்படுவார்கள். என்றும் கூறிய தமிழ்நாடு பாரதி ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இதுபோன்ற சம்பவம் இது வரை நடைபெறவில்லை என்பதால், இந்த விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாக பாஜக செயல்பட உள்ளது.

இதில் அரசியல் எதுவும் கிடையாது. என்றும் ஜேடர்பாளையம் சம்பவம் குறித்து பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தமிழக அரசுக்கு உரிய கோரிக்கையை வழங்க உள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர் எம் ரவி ஆகியோர்களுக்கு கூட இது பற்றி அறிக்கையை சமர்ப்பணம் சமர்ப்பிக்க உள்ளார் என்றும் டாக்டர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.

முதலில் ஏற்கனவே நடந்த சம்பவத்தின்போது சிபிசிஐடி விசாரணை செய்திருக்க வேண்டும். உண்மையை கண்டறிந்து சொல்ல வேண்டியது காவல்துறையின் பொறுப்பாகும். 

ஊடகங்களில் வெளியான தகவலின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக காவல்துறை மெத்தனமாக செயல்பட்டது என தெரிய வருகிறது.

வடகரையாத்தூர் ஊராட்சியில் சிசிடிவி கேமரா வைக்க வேண்டும் என முதல் சம்பவம் நடந்த போதே கோரிக்கை வைத்தார்கள்.

பஞ்சாயத்து கூட்டத்திலும் கிராம சபை கூட்டத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றினர் ஆனால் மாவட்ட நிர்வாகம் சிசிடிவி வைக்கவில்லை.

அதே கிராமத்தில் அவர்கள் கேட்ட போதே சிசிடிவி பொறுத்தியிருந்தால் இதுபோன்ற சம்பவம் இப்போது நடந்திருக்காது. இதுபோன்ற எமர்ஜென்சியான விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும் தனி நபர்களின் இழப்புகள், பொதுச்சொத்து சேதம் ஆகியவை குறித்து அரசாங்கம் கவலைப்பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தால் பல இழப்பு ஏற்பட்டுள்ளது. 

இனிமேல் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதை எல்லோரும் உணர வேண்டும். எல்லா ஜாதிகளிலும் குற்றவாளிகள் இருப்பார்கள். எனவே குற்றவாளியை குற்றவாளியாக மட்டுமே பார்க்க வேண்டுமே அவர்கள் சார்ந்த ஜாதி இன மதமாக, மாநிலமாகவும் பார்க்க கூடாது.

ஒருவர் குற்றம் செய்தால் அவர்கள் சார்ந்த ஜாதி இனம் மதம் சார்ந்த அனைவரையும் குற்றவாளியாக பார்க்க கூடாது. இதை உணர்ந்து பொதுமக்கள் அமைதி காத்திட வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என்றும் 

இந்த சம்பவம் மிகவும் உணர்ச்சிபூர்வமான சம்பவம் என்பதால் பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை இதில் நேரடியாக வந்து ஏதும் ஆய்வு செய்ய விரும்பவில்லை. இந்த சம்பவத்தில் அரசியல் செய்ய நாங்கள் விரும்பவில்லை. அமைதிப்படுத்துவதுதான் எங்கள் முக்கிய நோக்கமாகும்.

அதற்காகத்தான் உண்மை அறியும் அமைதி குழு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் இந்த குழு இன்று முதல் தன்னுடைய பணிகளை மேற்கொள்ளும். என்றும் 

இந்த விவகாரத்தில், நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று பொதுமக்களே கூறுகிறார்கள்.

இதுபோன்ற சம்பவம் ஆரம்பத்தில் நடந்த போது மாவட்ட நிர்வாகம் தடுத்திருக்க வேண்டும். இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள இந்த சம்பவத்தில் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

இதை ஏற்கனவே உடனடியாக அறிந்து உளவுத்துறை கூறி இருக்க வேண்டும். 

பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய இடையூறுகளை தடுப்பது எப்படி?, வன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்கு என்ன வழிவகை செய்வது?, என்பது குறித்து உளவுத்துறை அதனை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு இருக்க வேண்டும். காவல்துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பாஜக கருதுகிறது. 

இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினரை அந்தந்த கிராமங்களுக்கு நேரில் சென்று, முக்கிய பிரமுகர்களை கண்டறிந்து கூட்டங்களை நடத்திட வேண்டும்.

அந்தந்த கிராமங்களில் பொறுப்பாளர்களை அமைத்து, கூட்டங்கள் நடத்தி உண்மை நிலவரத்தை காவல்துறை கண்டறிய வேண்டும். அமைதி நிலையை கொண்டு வர வேண்டும். அமைதி ஏற்படுவதற்கு பாஜக முழு ஒத்துழைப்பு அளிக்கிறது என்றும் டாக்டர் கே பி ராமலிங்கம் தெரிவித்தார்.

கர்நாடக தேர்தல் குறித்து கேள்விக்கு பதில் அளித்த கே பி இராமலிங்கம், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் ஜனநாயக ரீதியாக பாஜக ஆட்சி நடத்துகிறது என்பதை காங்கிரஸின் வெற்றியே இப்போது உறுதிப்படுத்தி உள்ளது.

மக்கள் சக்தியை நம்பியே பாஜக உள்ளது. அந்தந்த மாநிலங்களில் நிலவரத்தை ஒட்டியே சட்டமன்றத் தேர்தல்கள் அமைந்துள்ளன. பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை தேர்தல் பணியாற்றிய பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் பாஜக சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. பாஜகவுக்கு ஒரே ஒரு கொள்கை திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதே ஆகும். ஒவ்வொரு கட்டமாக இந்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மந்திரி அபிசியல்ஆக கள்ள சாராயம் எடுத்துக்கொண்டு விற்பனை செய்து கொண்டுள்ளார். ஒவ்வொரு மதுபானம் கிடைக்கும் 6 வகையான போலி மதுபானம் டாஸ்மாக் கடைக்கு, மதுபான ஆலைகளிலிருந்து வந்து சேர்கிறது.

அரசாங்க முத்திரை உடனேயே போலி சாராயம் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் உள்ள மதுக்கூடங்களுக்கு வருகின்றன. இதில் கரூர் கும்பல் ஈடுபட்டுள்ளது. நேரடியாக கரூர் கும்பல் இதனை செய்வதால் திமுக மாவட்ட செயலாளர்கள் தாங்கள் சம்பாதிக்க முடியவில்லையே என்று வேதனடைந்துள்ளனர் என்றும்,

பாஜக மாநில துணைத்தலைவரும் பெருங்கோட்ட பொறுப்பாளருமான டாக்டர் கே.பி. இராமலிங்கம் நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்த நிகழ்வின்போது நாமக்கல் மாவட்ட பாஜக தலைவர்கள் என். பி. சத்தியமூர்த்தி, ராஜேஷ்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பழனியப்பன் வடிவேல், நாமக்கல், கரூர், சேலம், மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:

#namakkalnews , #namakkalnewsintamil , #bjp #ramalingam #kodherpalayam #tasmac #duplicutliquor ##namakkalnewslive , #namakkalnewstoday , #namakkalnewstodaytamil , #namakkalnewtodayslive #namakkalnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #namakkaltodaynews , #namakkallatestnews , #namakkalnews , #Latesttamilnadunewstamil , #spiritual #devotional #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0