Author: செ.சீனிவாசன்

Category: மாவட்டச் செய்தி

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கூட்டுறவுத்துறை , வருவாய்த்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் கீழ் 97 பயனாளிகளுக்கு 1 கோடியே 72 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கூறுகையில் ; தமிழக அரசு எப்பொழுதும் ஒரே நிலைப்பாடுதான். மேகதாதுவின் குறுக்கே அணைக்கட்ட விடமாட்டோம். அணைக்கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக துணைமுதல்வர் சிவக்குமார் பேச்சுக்கு பதிலடி தெரிவித்தார். 

கடந்த அதிமுக ஆட்சியில் பெயரளவில் மட்டுமே வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பணம் கையாடல் நடந்தது. கடைமடை வரைக்கும் மேட்டூர் நீர் சென்றடையும் வகையில் தூர்வாரும் பணிகள் நடந்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சிபோல ஏமாற்று வேலை செய்யவில்லை. ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் 10 ஆம் தேதிக்குள் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிக்கப்படும். தூர்வாரும் பணிகள் நடக்காமல் இருந்தால் உடனடியாக புகார் அளிக்கலாம் திமுக ஆட்சி வெளிப்படையான ஆட்சி என்று கூறினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ், மாவட்ட ஆட்சியர் ஜானி டாம்வர்கீஸ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

Tags:

#nagainews , #nagainewsintamil , #nagapattinamnewslive , #nagainewstoday , #nagapattinamnewstodaytamil , #nagapattinamnewspapertoday , #இன்றையசெய்திகள்நாகை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigaltamilnadu , #indrayaseithigalnagapattinamtamilnadu , #todaynewstamilnadu , #TheGreatIndiaNews #Tginews , #news , #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #nagapattinamtodaynews , #nagailatestnews , #Nagapattinamnews , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnewstamil , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #dmk #minister #magathathu #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday
Comments & Conversations - 0