Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும் வகையிலான நூல்கள் எழுதும் ஆதிதிராவிடர் / ஆதிதிராவிட கிருத்துவர் / பழங்குடியினர் பிரிவைச் சார்ந்த 10 எழுத்தாளர்கள் மற்றும் ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் ஆக மொத்தம் 11 எழுத்தாளர்களுக்கு உதவித்தொகையாக ரூ.1லட்சம் வழக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சிறந்த படைப்பாக தேர்ந்தெடுக்கப்படும் நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர் அந்த நூலினை வெளியிடுவதற்கு தலா ரூ .1,00,000 / - ( ரூபாய் ஒரு இலட்சம் மட்டும் ) நிதியுதவி அளிக்கப்படும். விண்ணப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் தங்களின் பெயர் , முகவரி , படைப்பின் பொருள் விண்ணப்பங்கள் மற்றும் படைப்பின் இரண்டு பிரதிகள் போன்ற விவரங்களுடன் 30.06.2022 - க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் , மாவட்ட ஆட்சியர் அலுவலகம் , பெரம்பலூர் - 621 112 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.06.2022 - க்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் செய்தியாளர் ஜஹாங்கீர்.

Tags:

#writers #communityconcernwriters #scholarshiptowriters #writersscholarship
Comments & Conversations - 0