• முகப்பு
  • அரசியல்
  • எப்போதும் இல்லாத அளவிற்கு சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது - மா சுப்பிரமணியன்

எப்போதும் இல்லாத அளவிற்கு சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது - மா சுப்பிரமணியன்

TGI

UPDATED: Mar 31, 2023, 7:32:15 AM

கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் டி நெடுஞ்சேரியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசு முன் வருமா என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், 

முதலமைச்சரின் அனுமதி பெற்று டீ நெடுஞ்செறியில் உள்ள துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு பரிசளிக்கப்படும் 

புவனகிரியில் உள்ள 123 கிராம ஊராட்சிகளில் உள்ள துணை சுகாதார நிலையங்களை புதிய கட்டிடங்கள் கட்ட அரசு முன் வர வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் வலியுறுத்தினார்.

அதற்கு பதில் அளித்து பேசிய மா.சுபிரமணியன், சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியது போல துணை சுகாதார நிலையங்களை புதுப்பிக்கவும் புதிதாக கட்டித் தருவதற்கும் நிதி ஆதாரங்களை திரட்டி பின்னர் பரிசளிக்கப்படும் என்றார்.

எப்போதும் இல்லாத அளவிற்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் துணை சுகாதார நிலையங்களை கட்டுவதற்கு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி அரசு செயல்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சுமார் 800 கோடி ரூபாய் நிதி பெற்று மாவட்டம் 10, 15 சுகாதார நிலையங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended