• முகப்பு
  • கல்வி
  • பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால நாணயங்கள் குறித்து காட்சியப்படுத்த அரசிடம் கோரிக்கை.

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால நாணயங்கள் குறித்து காட்சியப்படுத்த அரசிடம் கோரிக்கை.

தீனா

UPDATED: May 12, 2023, 7:12:08 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடைவீதியில் டீ கடை நடத்தி வருபவர் வசுமித்ரன்(42). இவர், 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். இவர் சொந்தமாக டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள் சேகரித்து வைத்துள்ளார். 

பள்ளி பருவ காலங்களில் நாணயங்கள் சேகரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுகள் கரன்சி மற்றும் நாணயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த 30 ஆண்டுகளில் இதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்கள் புழக்கத்திலிருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் இந்திய பழங்கால நாணயங்கள், அரிய வகை ரூபாய் நோட்டுகளை சேகரித்து வருகிறார்.

இதுவரை 1 பைசா, 10 பைசா, 25 பைசா, மன்னர்கள் காலத்து நாணயங்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்ட நாணயங்கள் வரை சேகரித்து கடையில் வைத்துள்ளார். 

கடைக்கு வரும் வாடிக்கை யாளர்கள் இதுகுறித்து விசாரிப்பார்கள். அவற்றைச் சேகரிப்பது குறித்து அவர்களுக்கு நான் ஆர்வமுடன் விளக்குவேன். இது மகிழ்ச்சியை எனக்கு அளிப்பதாக உள்ளது.

மேலும் போதிய வருமானம் இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பழங்கால நாணயங்கள் குறித்து காட்சிப்படுத்த என்னால் முடியவில்லை. அரசு உதவி செய்தால் இதை பள்ளி கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு காட்சிப்படுத்துவேன் என கூறியுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended