பெற்றோர் திட்டியதால் சிறுமி தற்கொலை.

சுரேஷ்பாபு

UPDATED: May 23, 2023, 8:31:10 PM

திருவள்ளுர் மாவட்டம் பூண்டி அடுத்த நயப்பாக்கம் பழங்குடியினர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளிகள் மணிகண்டன் கவிதா மகள் பவித்ரா வயது 13 இவர் அப்பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஆறாம் வகுப்பு செல்ல கோடை விடுமுறையில் தனது வீட்டில் இருந்து வந்தார் .

வீட்டு வேலை செய்யாமல் எந்த நேரம் தனது சக தோழிகளுடன் விளையாடுவதாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் 22.5.2023 மாலை அவர் வீட்டிற்கு கூலி வேலை சென்று வீடு திரும்பிய கணவன் மனைவிகள் அப்போது மகள் பவித்ராவை அடுப்பு எரிய வைக்க சொல்லிதாக கூறப்படுகிறது.

ஆனால் பவித்ரா பெற்றோர்கள் சொல்லியும் கேட்காமல் இருந்து வந்துள்ளார்.

ஆனால் அப்போது பவித்ராவை தனது பெற்றோர்கள் உன்னை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைத்தால் தான் நீ சரி படவ என சொல்லி விட்டு பூண்டியில் காய்கறி வாங்குவதற்காக கணவன் மனைவி சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டில் யாரும் இல்லாததால் தனது துப்பட்டாவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அப்போது பவித்ரா உடைய தங்கை மாதவி வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது அக்காள் மின்விசிறிகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அழுது கூச்சலிட்டுள்ளார்.

அக்கம் பக்கத்தினர் மின்விசிறியில் தூக்கிட்டு கொண்ட அவருடைய சடலத்தை இறக்கி திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்றோர்கள் விடுதியில் சேர்த்து விடுவதாக கூறியதால் 6 ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பூண்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended