Author: ஆர்.ஜெயச்சந்திரன்

Category: ஆன்மீகம்

தஞ்சை மாவட்டம் பின்னையூர் நாட்டில் 900 ஆண்டுகளுக்கு மேலாக நடைப பெற்று வரும் தூக்கு தேர்த் திருவிழா வான வேடிக்கையுடன் 18 கிராமங்களில் வலம் வந்தன. ஆட்கள் மட்டுமே தேரை தோளில் சுமந்து செல்வது இவ்விழாவின் சிறப்பாகும். 

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகில் உள்ள 18 கிராமங்களை உள்ளடக்கிய பின்னையூர் நாட்டில் அமைந்துள்ள அருள்மிகு. திருத்தாண்டி அய்யனார், அருள்மிகு. பிடாரி அம்மன், அருள்மிகு சூலப் பிடாரி அம்மன் ஆலயங்களின் சித்திரை பெருவிழா வின் முக்கிய நிகழ்வான தூக்குத் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

_______________________________________________________

தூக்கு தேர்த் திருவிழா வீடியோவை பார்க்க கிளிக் செய்யவும் :-

https://youtu.be/YVTI7BLDtsw

_______________________________________________________

900 ஆண்டுகளுக்கு மேலாக நடைப்பெற்று வரும் இவ்விழாவில் பெண்கள் முளைப்பாரி எடுத்து, கோலாட்டம் ஆடி முன் செல்ல தேர் பின் தொடர்ந்து வந்தது. தேரை ஆட்களே தோளில் சுமந்து வருவது தான் இந்த தேர்த் திருவிழாவின் சிறப்பாகும். 

எந்த இடத்தில் இருந்து தேர் புறப்பட்டதோ மீண்டும் தேர் நிலை வரும் வரை எந்த இடத்திலும் இறக்கி வைக்காமல் தோளில் சுமந்து வருவதால் தூக்கு தேர் என அழைக்கப்படுகிறது. வழி நெடுக மக்கள் மாலை, தேங்காய், பழம் வைத்து சுவாமிகளுக்கு பூஜை செய்து வழிப்பட்டனர்.

தேர் 18 கிராமங்களுக்கும் சென்று (இன்று) 13ம் தேதி மாலை நிலை வந்தடைகிறது. சாதி, மதம் பார்க்காமல் பங்காளிகள் பகையை மறந்து ஒற்றுமையுடன் உறவாக இந்த விழா கொண்டாடப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

Tags:

#Thanjavurnewstoday , #Thanjavurnewspapertoday , #Thanjavurnewspaper, #Thanjavurnewschannel , #Thanjavurnewsupdate, #Thanjavurlatestnews, #Thanjavurnews , #Thanjavurnewstodaylive , #Thanjavurlatestnews, #papanasamnewstoday #papanasamnews #papanasam #latestnewsinthanjavur , #TheGreatIndiaNews , #Tginews , #news #Tamilnewschannel , #TamilnewsFlash , #Tamilnewslivetv , #Latesttamilnadunewstamil , #Tamilnewsdaily , #Districtnews , #politicalnews , #crimenews , #Newsinvariousdistricts , #tamilnews #tamillatestnews , #todaysindianewstamil #politicalnews , #aanmegamnews , #todaystamilnadunews , #indiabusinesstoday , #neyvelinewstoday , #peoplestruggle , #இன்றையசெய்திகள்தஞ்சை , #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு , #இன்றையசெய்திகள்தமிழ்நாடு , #indrayaseithigalthanjavur , #todaynewsthanjavurtamilnadu ,
Comments & Conversations - 0