Author: THE GREAT INDIA NEWS

Category: district

பெரம்பலூர் மாவட்டம், எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு புதிய நியாயவிலை அங்காடி கட்டித்திற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் வடக்கு மாதவி எரிக்கரை பகுதியில், பகுதிநேர அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் இன்று (11.07.2022) துவக்கி வைத்தார்கள். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: பெரம்பலூர் வட்டம், எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வடக்குமாதேவி முழுநேர நியாயவிலை அங்காடியில் 822 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் வடக்குமாதேவி முழுநேர நியாயவிலை அங்காடியில் 822 குடும்ப அட்டைகள் உள்ளதாலும், பொதுமக்கள் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க சிரமமாக இருப்பதாலும், மழைக் காலங்களில் வயதானோர், ஊனமுற்றோர் 2 கி.மீ. தொலைவு நடந்து வந்து பொருட்கள் வாங்க சிரமமாக உள்ளதாலும் வடக்குமாதேவி ஏரிக்கரை பகுதியில் ஒரு பகுதிநேர அங்காடி அமைப்பது அவசியமாகிறது. எனவே, ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் 222 குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி, அப்பகுதியில் புதிதாக பகுதிநேர அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொதுவிநியோகத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மக்களுக்கு உரிய நேரத்தில் தரமான மற்றும் சரியான பொருட்கள் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கிடைத்திட உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் பொது விநியோகத்திட்டத்தின் சார்பில் எந்த ஒரு கோரிக்கை வந்தாலும் அதனை உரிய அலுவலர்களை கொண்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எசனைப் பகுதியில் குளம் தூர்வாரும் பணி, உட்கட்டமைப்பு வசதி, மகளிர் கழிப்பிடம் மற்றும் பிரதானமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் களவள மேம்பாட்டு திட்டத்திலும் இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யக்கூடிய சாதியகூறுகள் இல்லாத நிலங்களையும் விவசாயம் செய்யும் நிலமாக மாற்றி தனிமனித வருமானத்தினை உயர்த்திட உரிய அலுவலர்களை கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றம் புதிதாக செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் அங்காங்கே எற்படும் குறைகளை நேரடியாகவோ, மனுக்கள் மூலமாகவோக தெரிவித்தால் உடனடியாக அக்குறைகள் உரிய அலுவலர்களை கொண்டு சரிசெய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு, தனியார் வாடகை கட்டிடத்தில் இயங்கும் நியாயவிலை கடைகளுக்கு பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து , எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் எசனை-2 அங்காடிக்கு, புல எண் 197 உட்பிரிவு 1B இல் 3000 சதுரஅடி நிலப்பரப்பு கொண்ட இடத்தில் ரூ.10 இலட்சம் மதிப்பிலான புதிய நியாயவிலை அங்காடி கட்டுவதற்காக பூமிபூஜை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் ஒன்றியக்குழுத்தலைவர் திருமதி.மீனா அன்னாதுரை, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.எஸ்.சங்கர், சரக துணைப்பதிவாளர் திரு.த.பாண்டித்துரை, பொது விநியோகத்திட்ட துணைப்பதிவாளர் திரு.கே.கே.செல்வராஜ், ஊராட்சி மன்ற தலைவர் திரு.பெ.தங்கராஜன், சங்க செயலாளர் திரு.குனசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பெரம்பலூர் செய்தியாளர் ஜகாங்கீர்.

Tags:

#perambalurnewstamiltoday #perambalurnewspapertamil #perambalurnewstodaytamil #இன்றையசெய்திகள்பெரம்பலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #indrayaseithigalperambalurtamilnadu #indrayaseithigaltamilnadu #todaynewsperambalur #todaynewsperambalurtamilnadu #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #perambalurtodaynews #perambalurlatestnews #perambalurnews #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle
Comments & Conversations - 0