மீனவர்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடத்தாமல் புரக்கணிக்கப் படுவதாக குற்றச்சாட்டு.

கார்மேகம்

UPDATED: May 31, 2023, 7:46:52 PM

இராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் தொடர்ந்து தள்ளிவைக்கப் படுவதும் அற்காக சொல்லப்படும் காரணங்களும் ஏற்புடையதாக இல்லை.

சென்ற 26/05/2023 அன்று நடைபெற இருந்த மீனவர் குறைதீர்ப்பு கூட்டம் நிர்வாக ரீதியிலான காரணங்களுக்காக 31/05/2023க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

சரி தற்போது அது மீண்டும் 09/06/2023 க்கு தள்ளிவைக்கப் பட்டு இருப்பதும் அதற்கு சொல்லப்படும் காரனமும் பொருத்தமானதாக தெரியவில்லை.

இப்படி மீனவர்கள் குறைதீர்ப்பு கூட்டம் பல கட்டங்களாக தள்ளிவைக்கப்பட்டு வருகிறது.

அரசு தலைமைச் செயலாளர் வருகைக்காக மீனவர் குறைதீர் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது என்றால் அதனை அதற்கடுத்த நாளில் நடத்தலாமே மாறாக 09. நாட்கள் வரை மீனவர்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏன் ?

02/06/2023அன்று நடத்தப் படலாமே அன்று நல்ல நாள் இல்லையோ இப்படி ஓவ்வொரு முறையும் சொல்லப் படும் காரணங்கள் முன்னுக்குப் பின் முரணாக  இருக்கிறது 23/05/2023ல் இராமேஸ்வரம் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்சஓழிப்பு துறை சோதனை அதனை தொடர்ந்து எடுத்துள்ள நமது நியாயமான நடவடிக்கைகள் சந்தேகங்களுக்கு பதில்  அளிப்பதை தவிர்க்கும் முயர்ச்சியோ என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மீன்பிடி தடைகாலம் முடிந்து துவங்கும் ஓவ்வொரு ஆண்டும் அதன் பலனை மீனவர்கள் அனுபவிக்கிறார்களா  என்பதை விவாதிக்க வேண்டிய நேரம் இது.

இலங்கை கடற்படையின் நடவடிக்கையில் இருந்து இந்த ஆண்டாவது நம் மீனவர்களை பாதுகாக்க முடியுமா  என்பதுடன் அதற்கு தடையாக உள்ள விசயங்களை கவணத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் இது 

இப்படி அடுக்கடுக்கான ஆயிரம் விசயங்களை விவாதிக்க வேண்டிய  மீனவர் கூட்டம் இது எனவே இதன் அவசரம் மற்றும் அவசியத்தை உணர்ந்து மீனவர் குறைதீர் கூட்டத்தை 09.நாட்கள் வரை காத்திராமல் உடன் நடத்திட மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீனவர்களின் குறைதீர் கூட்டத்தை உடன் நடத்துமா மீன்வளத்துறை.

VIDEOS

RELATED NEWS

Recommended