பாபநாசம் அருகே ரெகுநாதபுரம் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலய கோவில் திருவிழா.
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 28, 2023, 6:31:00 PM
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா நெடுந்தெரு ரெகுநாதபுரம் அம்பலக்கார தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
கடந்த 14ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்,அம்மன் வீதி உலா நடந்து வந்த நிலையில், பால்குடம் எடுத்தல் விழாவை முன்னிட்டு அம்மனை வேண்டி விரதம் இருந்த பக்தர்கள் குடமுருட்டி ஆற்றில் இருந்து சக்தி கரகம், பால்குடம், தீச்சட்டிகள் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
மேலும் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.
அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிசேகம் ஆராதனை நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நெடுந்திரு ரெகுநாதபுரம் அம்பலக்கார தெரு கிராமவாசிகள் மற்றும் நாட்டாமைகள் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.