• முகப்பு
  • இரட்டை விருதுகளைப் பெற்ற திருவாரூரை சேர்ந்த பெண் கவிஞர்.

இரட்டை விருதுகளைப் பெற்ற திருவாரூரை சேர்ந்த பெண் கவிஞர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை சூரியனின் விடியல் விருதுகள் 2022 என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி கவுரவித்தது. அதேபோன்று திண்டுக்கல் சின்னாளப்பட்டியை சேர்ந்த பசுமை வாசல் பவுண்டேஷன்,தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சுபம் கல்வி அறக்கட்டளை, கம்பன் கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் சேவகர் தளபதியின் பொற்கால விருதுகள் 2022 என்கிற தலைப்பில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைசார்ந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தது. அதனடிப்படையில் திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முதுகலை தமிழ் ஆசிரியராக பணிபுரியும் சந்தானலட்சுமிக்கு அவரது சிறந்த கவித்திறன் ஆற்றலுக்காக அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கையெழுத்திட்ட சான்றிதழுடன் கவிநயம் கலைஞர் விருது வழங்கப்பட்டது. அதேபோன்று சிறந்த கவிஞரும் பேச்சாளருமான  சந்தான லட்சுமிக்கு பசுமை வாசல் பவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து குறிஞ்சி கவிமலர் விருது வழங்கி கௌரவித்துள்ளது. கவிஞர் சந்தானலட்சுமி முக்கிய அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை தனது கவித்திறன் மற்றும் பேச்சாற்றலால் சிறப்புற தொகுத்து வழங்குவதுடன், பல்வேறு பேச்சு மற்றும் பட்டிமன்றங்களில் கலந்து கொண்டு அழகு தமிழில் பேசி இலக்கிய வட்டங்களில் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இரட்டை விருதுகளைப் பெற்ற கவிஞரும் ஆசிரியருமான சந்தான லட்சுமியை புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட சக ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended