• முகப்பு
  • aanmegam
  • ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புகழ்பெற்ற மட்டபாறைப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா.

ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புகழ்பெற்ற மட்டபாறைப்பட்டி பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அருகே மட்டபாறைப்பட்டியில் புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. 7 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே திருவிழா நடைபெறும். இந்த ஆலயத்தில் கடந்த 2015 ம் ஆண்டிற்கு பின் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 31 ம் தேதி இரவு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சிகளில் முதன்மையான எருமைக்கிடா வெட்டும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. கருப்பசாமி பூஜை நடைபெற்ற பின் அரிவாள் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனுக்காக வாங்கி கோவிலில் விடப்பட்டிருந்த எருமைக்கிடாக்கள் வெட்டப்பட்டது. திருவிழாவின் நிறைவாக இன்று அம்மன் கோவிலை சுற்றி உலா வந்தது. சிறப்பு வழிபாடுகளுக்கு நடைபெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். தொடர்ந்து திரண்டிருந்த மக்கள் மீது மஞ்சள் நீர் தெளிக்கப்பட்டு மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியும், கரகம் பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவுபெற்றது. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்

VIDEOS

RELATED NEWS

Recommended