• முகப்பு
  • india
  • அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும். வயாகரா தந்த வாழ்க்கைப்பாடம்.

அளவுக்கு மிஞ்சினால் அமிழ்தமும் நஞ்சாகும். வயாகரா தந்த வாழ்க்கைப்பாடம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

உத்தரபிரதேசத்தில் பிரயாக்ராஜைச் பகுதியை சேர்ந்த 28 வயது ஒரு இளைஞருக்கு, திருமணமான மூன்றுமாதங்கள் ஆகிய நிலையில், அவரதுநண்பர்கள் பாலியல்சக்தியை அதிகரிக்க வயாக்ராவை உட்கொள்ள அறிவுறுத்தினர்.  மருத்துவர்களைக்கலந்தாலோசிக்காமல், தினமும் 25 - 30 மி. கி வயாக்ராவை உட்கொள்ளத்தொடங்கினார்.  ஆனால் எந்த விதபலனும் இல்லையென, நண்பர்களின் ஆலோசனையின்பேரில் அவர்தனது அளவை அதிகரித்தார். அந்த இளைஞன் 200 மி.கிராம் வரை வயாகரா சாப்பிட்டது தொடங்கினார். அவரது இந்த நடவடிக்கையினால், கோபம் அடைந்த மனைவி தனதுதாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.  காரணம் அந்தநபரின் அந்தரங்க பகுதிதானாக துடிக்க ஆரம்பித்தது. இருபது நாட்களாகியும் துடிப்பது நிற்கவே இல்லை.  அந்தநபர் கடைசியில் மருத்துவ மனைக்குச்செல்ல வேண்டியிருந்தது. இதைபார்த்த டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்து அறுவைசிகிச்சை செய்தனர்.  ஆபரேஷனுக்குப்பிறகு நிலைமை இயல்பாகி விட்டாலும், இப்போது இதன் பக்கவிளைவு வாழ்நாள்முழுவதும் நீடிக்கும் என்று கூறப்பட்டது.  இதனால் மனஅழுத்தம் மிகவும்அதிகரிக்கும் எனவும் கூறப்பட்டது. எனினும், பிரயாக்ராஜில் உள்ள அரசுமருத்துவ மனை மோதியால்நேரு மருத்துவக்கல்லூரியின் மருத்துவர்கள், ஆண் குறி செயற்கை அறுவைசிகிச்சை செய்து அவரது அனைத்துப்பிரச்சனைகளையும் நீக்கினர்.  அறுவை சிகிச்சைக்குப்பிறகு, அந்த இளைஞன் இப்போதுதனது இயல்பான வாழ்க்கையை நடத்துவார்எனவும், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனவும் சிறுநீரகவியல் துறையின்தலைவர் டாக்டர் திலீப்சௌராசியா கூறினார். மருத்துவர்களிடம் கலந்து ஆலோசிக்காமல் வயாக்ரா சாப்பிடுவது பெரும்ஆபத்தென மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.  தற்போது நோயாளியின் உடல்நிலைசீராக இருப்பதாகவும், விரைவில்அவர் மருத்துவ மனையில் டிஸ்சார்ஜ் செய்யப் படுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended