தோப்புப் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்தவரை நூறடி தூரம் இழுத்துச் சென்ற யானை.

ராஜ்குமார்

UPDATED: May 18, 2023, 9:33:15 AM

தென்காசி மாவட்டத்தில் உள்ள கடைநல்லூர் அருகே உள்ள கருப்பநதி அணைப்பகுதியில் மழைவாழ் மக்கள் சுமார் 15 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள மலைப்பகுதியில் தேன் எடுத்து அதனை விற்பனை செய்து அதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் மலையில் தேன் எடுப்பதற்காக சென்றுள்ளனர். இரவு நீண்ட நேரமானதால் அவர்கள் அனைவரும் அப்பகுதியில் இருந்த தோப்பு பகுதியில் தங்கியுள்ளனர். அப்போது அங்கு வந்த யானை ஒன்று தூங்கிக்கொண்டிருந்தவர்களில் ஒருவரைத் தாக்கி அவரை 100 அடி தூரம் இழுத்து சென்றுள்ளது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் காத்திக் கூச்சலிட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். உடனே யானை அந்த நபரை அங்கேயே விட்டுவிட்டு வனபகுதிக்குள் சென்றது.

அதன் பின்னர் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் படி அங்கு சென்ற வனத்துறையினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended