Author: THE GREAT INDIA NEWS

Category: district

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் இருந்து ஒரு மினி டெம்போ பால் பாக்கெட்டுகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர், எலவனாசூர்கோட்டை ஆகிய ஊர்களில் உள்ள பால் கடைகளில் இறக்கிவிட்டு உளுந்தூர்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தது இந்த வாகனத்தை கண்டாச்சிபுரம் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் என்பவர் ஓட்டி வந்தார். இந்த பால் வண்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கடைவீதியில் வந்தபோது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி சென்ற ஈச்சர் லாரி ஒன்று நேருக்கு நேராக பயங்கரமாக மோதியது . இதில் பால் வண்டியின் முகப்புப் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது மேலும் பால் வண்டியை ஓட்டி வந்த ஜெகன் படுகாயமடைந்தார் . மேலும் பால் வண்டியில் இருந்த 600 லிட்டர் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகள் சாலையில் சிதறி உடைந்து வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது இன்று காலை நடந்த இந்த விபத்தினால் சாலையில் கண்ணாடி துகள்களும் பால் மற்றும் தயிர் பாக்கெட்டுகளிலும் சிதறிக் கிடந்தது . இதையடுத்து எஞ்சியிருந்த பால் பாக்கெட்டுகளை மாற்று வாகனத்தில் பால் விற்பனையாளர்கள் ஏற்றி கொண்டு சென்றனர் இந்த விபத்தில் காயமடைந்த பால் வண்டி ஓட்டுநர் ஜெகன் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் அதிகாலை நேரத்தில் நடந்த விபத்தால் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கள்ளக்குறிச்சி செய்தியாளர் ஆதி. சுரேஷ்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #peoplestruggle #accident #milkvan #eicher
Comments & Conversations - 0