• முகப்பு
  • political
  • திருவாரூரில் முதல்வரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.

திருவாரூரில் முதல்வரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஒட்டப்பட்ட போஸ்டர்களை திமுகவினர் கிழித்து எறிந்தனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருவாரூர் : கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி திராவிடம் பற்றி கடுமையாக விமர்சித்துப் பேசியதை அடுத்து அங்கிருந்த திமுகவினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணசாமியை கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறி தமிழகம் முழுவதும் புதிய தமிழகம் மற்றும் அனைத்து தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் தெலுங்கர் மு.க ஸ்டாலினே மன்னிப்பு கேள் என போஸ்டர் ஒட்டி உள்ளனர். மேலும் அந்த போஸ்டரில் திராவிடனே வெளியேறு வன்முறை கும்பலை கைது செய் வாசகங்கள் அடங்கிய போஸ்டரை அடித்து ஒட்டியுள்ளனர். இந்த நிலையில் திருவாரூர் நீடாமங்கலம் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்த நிலையில் திருவாரூரில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரஜினிசின்னா கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் புதிய தமிழகம் கட்சி சார்பில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசை கிழித்து எறிந்தனர் , இதனால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் செய்தியாளர் இளவரசன். இன்றைய செய்திகள் சென்னை தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,Thiruvarur news tamil,thiruvarur today news tamil,thiruvarur tamil news live,In Thiruvarur,the DMK tore down posters urging the chief minister to apologize,dmk,dmk stalin,puthiya thamilagam katchi krishnasamy,pt party krishnasamy

VIDEOS

RELATED NEWS

Recommended