• முகப்பு
  • district
  • திமுக ஆட்சி என்பது அது பெண்களுக்கான ஆட்சி?

திமுக ஆட்சி என்பது அது பெண்களுக்கான ஆட்சி?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள துவரங்குறிச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை நான் இந்த இயக்கத்தில் தொண்டன் என்ற உணர்வு, பெருமையைப் பெற்றிருக்கின்ற இயக்கம். வாழ்ந்த காலம் வரை இம்மியளவும் தான் கொண்ட கொள்கையில் இருந்து பிசகாமல் வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளைத்தான் நமது மாவட்டம் மட்டுமல்ல தமிழகம் முழுவதுமே பட்டி தொட்டி எல்லாம் அவரது புகழை பறைசாற்றும் விதமாக இந்த விழாவை இன்று எடுத்துக்கொண்டு இருக்கின்றோம். கலைஞர் என்ற நான்கு எழுத்து தான் இன்றைக்கு நம்முடைய தலை எழுத்தாக வாழ வைக்கின்ற எழுத்தாக இருந்து கொண்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த ஆட்சி என்பது அது பெண்களுக்கான ஆட்சிதான். தொடர்ந்து பெண்கள் முன்னேற்றம், மாணவர்கள் முன்னேற்றம் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கக்கூடிய பல திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் நமது முதல்வர். இந்தியாவிலேயே விவசாயத்துக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது திமுக ஆட்சிதான் என்பதை நாம் பெருமையாக கருதவேண்டும் என அமைச்சர் பேசினார். மேலும் இக்கூட்டத்தில் பேசிய கட்சியின் செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன்பிரசன்னா, ஆர்எஸ்எஸ் காரர்களை இந்திய ராணுவத்தில் சேர்த்து இந்திய ராணுவத்தை காவி மயமாக்கும் அயோக்கியத்தனத்தை பாஜக அரசு அக்னி பாத் மூலம் செய்து கொண்டிருக்கின்றது. என்று குற்றஞ்சாட்டினார். கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் வண்ணை அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் பன்னப்பட்டி கோவிந்தராஜன், பேரூர் செயலாளர் பழகருப்பையா, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சின்ன அடைக்கன் செல்வராஜ் ராமசாமி சபியுல்லா, ஒன்றியக்குழு தலைவர்கள் மருங்காபுரி பழனியாண்டி, மணப்பாறை அமிர்தவல்லி, வையம்பட்டி குணசீலன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மணப்பாறை செய்தியாளர் லட்சுமணன்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended